Enable Javscript for better performance
முதல்வரின் சிறப்பு குறைதீர் கூட்டம்: பொதுமக்களிடம் மனுக்களைப் பெற 70 குழுக்கள் அமைப்பு- Dinamani

சுடச்சுட

    

    முதல்வரின் சிறப்பு குறைதீர் கூட்டம்: பொதுமக்களிடம்  மனுக்களைப் பெற 70 குழுக்கள் அமைப்பு

    By DIN  |   Published on : 24th August 2019 09:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    முதல்வரின் சிறப்பு குறைதீர் கூட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் வகையில் மாவட்ட அளவில் மக்களிடம் இருந்து மனுக்களைப் பெற 70 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
    முதல்வரின் சிறப்பு குறைதீர் கூட்டங்கள் பல்வேறு அரசு அலுவலகங்களில் நடத்தப்படுகிறது. இத்திட்டத்தை சேலத்தில் முதல்வர் அண்மையில் துவக்கி வைத்தார். இதைத் தொடர்ந்து, ஈரோடு மாவட்டத்தில் கடந்த 22 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர், வட்டாட்சியர், மாநகராட்சி ஆணையர், உதவி ஆணையர்கள்,  ஊராட்சி செயலாளர் என பலரும் மக்களிடம் மனுக்களைப் பெற்று வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாள்களில் ஆகஸ்ட் 30 ஆம் தேதி வரை மனுக்கள் பெறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் கூறியதாவது:
    பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெறும் பணி நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 30 ஆம் தேதி வரை மாவட்ட அளவில் நடைபெற உள்ளது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி, கிராம நிர்வாக அலுவலகம் உள்பட பல இடங்களில் மனுக்கள் பெறப்படுகிறது. இதற்காக மாவட்ட அளவில் 70 குழுக்கள் அமைக்கப்பட்டு மனுக்கள் பெறப்படுகிறது. பெறப்படும் மனுக்கள் உடனடியாக பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுமக்கள், தங்கள் மனுக்களை அக்குழுவினரிடம் வழங்கி தீர்வு பெறலாம்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai