நந்தா கலை, அறிவியல் கல்லூரியில் ரேடியன்ஸ்19 விழா

ஈரோடு நந்தா கலை, அறிவியல் கல்லூரியின் மேலாண்மைத் துறையின் சார்பில், 9 ஆவது ஆண்டு ரேடியன்ஸ்19 என்ற தலைப்பில் விழா அண்மையில் நடைபெற்றது. 

ஈரோடு நந்தா கலை, அறிவியல் கல்லூரியின் மேலாண்மைத் துறையின் சார்பில், 9 ஆவது ஆண்டு ரேடியன்ஸ்19 என்ற தலைப்பில் விழா அண்மையில் நடைபெற்றது. 
விழாவை, ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளை உறுப்பினர் பானுமதி சண்முகன் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். அறக்கட்டளையின் தலைவர் வெ.சண்முகன் தலைமை வகித்துப் பேசினார். கல்லூரி முதல்வர் ம.கோபாலகிருஷ்ணன் விழாவின் நோக்கம் குறித்துப் பேசினார். முன்னதாக கல்லூரியின் மேலாண்மைத் துறைத் தலைவர் பி.மோகன்ராஜ் வரவேற்றார். 
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஈரோடு செளபாக்யா நிறுவனங்களின் மேலாண்மை இயக்குநர் வி.ஆதிகேசவன், சுய தொழிலில் எவ்வாறு சாதிப்பது என்பது குறித்துப் பேசினார். விழாவையொட்டி, மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. 
விழாவில், நந்தா கல்வி நிறுவனங்களின் ஆலோசகர் எஸ்.பி.விஸ்வநாதன், முதன்மைக் கல்வி அலுவலர் எஸ்.ஆறுமுகம், ஸ்ரீ நந்தா கல்வி நிறுவன அறக்கட்டளைகளின் செயலாளர் எஸ்.நந்தகுமார் பிரதீப், நந்தா கல்வி நிறுவனங்களின் செயலாளர் எஸ்.திருமூர்த்தி, கலை அறிவியல், பாலிடெக்னிக், பொறியியல், தொழில் நுட்பக் கல்லூரியின் மாணவர்கள் 5,000 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com