டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வில் 53,259 பேர் பங்கேற்க ஏற்பாடு

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வை ஈரோடு மாவட்டத்தில் 53,259 பேர் எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வை ஈரோடு மாவட்டத்தில் 53,259 பேர் எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
இதுகுறித்து, ஈரோடு மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் (டி.என்.பி.எஸ்.சி.) குரூப் 4 தேர்வு ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 1) நடைபெறவுள்ளது. ஈரோட்டில் 16,137 பேர், பவானியில் 6,871, கோபியில் 9,739, பெருந்துறையில் 5,766, சத்தியமங்கலத்தில் 4,530, அந்தியூரில் 5,049, கொடுமுடியில் 2,255, மொடக்குறிச்சியில் 2,912 பேர் என மாவட்டத்தில் மொத்தம் 53,259 பேர் தேர்வு எழுதவுள்ளனர்.
ஒரு தேர்வு கூடத்துக்கு அதிகபட்சமாக 400 பேர் என 176 தேர்வுக் கூடங்களில் பங்கேற்கின்றனர். தேர்வை கண்காணிக்க 14 பறக்கும் படை, 28 நடமாடும் குழு, 155 ஒளிப்பதிவாளர், 176 ஆய்வு அலுவலர்கள் ஈடுபடுகின்றனர். அந்தந்தப் பகுதி சார் நிலைக் கருவூலத்தில் வினாத்தாள், விடைத்தாள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. தேர்வு நாளில் பலத்த போலீஸ் பாதுகாப்பில் எடுத்துச் செல்லப்படும்.
அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் தேர்வு மையங்களுக்கு சிறப்பு பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. இத்தேர்வு காலை 10 முதல் பகல் 1 மணி வரை நடைபெறுகிறது. தேர்வுக்கூடத்தில் காலை 9 மணிக்குள் தேர்வு எழுதுவோர் ஆஜராக வேண்டும். தேர்வு துவங்கி 30 நிமிடங்களுக்குப் பின் வருவோர் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள். 
நுழைவுச்சீட்டை கட்டாயம் கொண்டு வர வேண்டும். நுழைவுச் சீட்டில் உள்ள போட்டோ மாறுபட்டிருந்தால் ஆதார், வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஆவணங்களை எடுத்து வர வேண்டும். கருப்பு, நீல நிற பந்து முனை பேனா அனுமதிக்கப்படும். கால்குலேட்டர், செல்லிடப்பேசி, கடிகாரம் போன்றவை அனுமதிக்கப்பட மாட்டாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com