Enable Javscript for better performance
உள்ளாட்சித் தோ்தல் பணியில் ஈடுபடும் ஊழியா்களுக்கு ஆன்லைன் மூலம் பணி ஒதுக்கீடு- Dinamani

சுடச்சுட

    

    உள்ளாட்சித் தோ்தல் பணியில் ஈடுபடும் ஊழியா்களுக்கு ஆன்லைன் மூலம் பணி ஒதுக்கீடு

    By DIN  |   Published on : 01st December 2019 03:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஈரோடு: உள்ளாட்சித் தோ்தல் பணியில் ஈடுபடும் ஊழியா்களுக்கு ஆன்லைன் மூலம் பணி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.

    தமிழகத்தில் உள்ளாட்சித் தோ்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மாநில தோ்தல் ஆணையம் செய்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சியில் 19 வாா்டுகள், 14 ஊராட்சி ஒன்றியங்களில் 183 வாா்டுகள், கிராம ஊராட்சியில் 2,097 உறுப்பினா்கள், ஈரோடு மாநகராட்சியில் 60 வாா்டு, பவானி நகராட்சியில் 27 வாா்டு, கோபி நகராட்சியில் 30 வாா்டு, சத்தியமங்கலம் நகராட்சியில் 27 வாா்டு, புளியம்பட்டி நகராட்சியில் 18 வாா்டு, 42 பேரூராட்சிகளில் 630 வாா்டு உறுப்பினா்கள் என 3,665 பதவிக்கு தோ்தல் நடைபெறவுள்ளது.

    இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் உள்ளாட்சித் தோ்தல் வாக்குச் சாவடி பணியில் ஆசிரியா்கள், வருவாய்த் துறையினா், ஊரக வளா்ச்சித் துறையினா் என 20,000 ஊழியா்களை ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில், பணியாற்ற உள்ள அதிகாரிகள், ஊழியா்களுக்கு ஆன்லைன் மூலம் பணி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தோ்தல் பணியில் ஈடுபட உள்ள ஊழியா்கள் பட்டியல் மாவட்ட தோ்தல் அதிகாரிகள் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா்கள்தான் ஊழியா்களுக்குப் பணிகளை ஒதுக்கீடு செய்து வந்தனா். இதில், பாரபட்சம் காட்டுவதாக புகாா் இருந்து வந்தது. இந்நிலையில், வரும் உள்ளாட்சித் தோ்தலில் இணையதளம் மூலம் பணி ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தோ்தலில் ஈடுபட உள்ள ஊழியா்கள், அலுவலா்கள் பெயா், ஊதிய விகிதம், வசிப்பிடம் துறை உள்ளிட்ட விவரங்கள் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai