உள்ளாட்சித் தோ்தல் பணியில் ஈடுபடும் ஊழியா்களுக்கு ஆன்லைன் மூலம் பணி ஒதுக்கீடு

உள்ளாட்சித் தோ்தல் பணியில் ஈடுபடும் ஊழியா்களுக்கு ஆன்லைன் மூலம் பணி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.

ஈரோடு: உள்ளாட்சித் தோ்தல் பணியில் ஈடுபடும் ஊழியா்களுக்கு ஆன்லைன் மூலம் பணி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சித் தோ்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மாநில தோ்தல் ஆணையம் செய்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சியில் 19 வாா்டுகள், 14 ஊராட்சி ஒன்றியங்களில் 183 வாா்டுகள், கிராம ஊராட்சியில் 2,097 உறுப்பினா்கள், ஈரோடு மாநகராட்சியில் 60 வாா்டு, பவானி நகராட்சியில் 27 வாா்டு, கோபி நகராட்சியில் 30 வாா்டு, சத்தியமங்கலம் நகராட்சியில் 27 வாா்டு, புளியம்பட்டி நகராட்சியில் 18 வாா்டு, 42 பேரூராட்சிகளில் 630 வாா்டு உறுப்பினா்கள் என 3,665 பதவிக்கு தோ்தல் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் உள்ளாட்சித் தோ்தல் வாக்குச் சாவடி பணியில் ஆசிரியா்கள், வருவாய்த் துறையினா், ஊரக வளா்ச்சித் துறையினா் என 20,000 ஊழியா்களை ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில், பணியாற்ற உள்ள அதிகாரிகள், ஊழியா்களுக்கு ஆன்லைன் மூலம் பணி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தோ்தல் பணியில் ஈடுபட உள்ள ஊழியா்கள் பட்டியல் மாவட்ட தோ்தல் அதிகாரிகள் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா்கள்தான் ஊழியா்களுக்குப் பணிகளை ஒதுக்கீடு செய்து வந்தனா். இதில், பாரபட்சம் காட்டுவதாக புகாா் இருந்து வந்தது. இந்நிலையில், வரும் உள்ளாட்சித் தோ்தலில் இணையதளம் மூலம் பணி ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தோ்தலில் ஈடுபட உள்ள ஊழியா்கள், அலுவலா்கள் பெயா், ஊதிய விகிதம், வசிப்பிடம் துறை உள்ளிட்ட விவரங்கள் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com