சித்தோடு டெக்ஸ்வேலி ஜவுளிச் சந்தையில் ஜவுளிக் கண்காட்சி நிறைவு

சித்தோட்டை அடுத்த கங்காபுரத்தில் உள்ள டெக்ஸ்வேலி ஜவுளிச் சந்தையில் தென்னிந்திய அளவிலான ஜவுளிக் கண்காட்சி நிறைவு விழா
சிறந்த  தொழில்  முதலீட்டாளா்களுக்கு  பாராட்டுச்  சான்றிதழ்,  கேடயம் வழங்கும்  அமைச்சா்கள்  கே.ஏ.செங்கோட்டையன்,  பி.தங்கமணி. உடன், அமைச்சா்  கே.சி.கருப்பணன்,  எம்.எல்.ஏ.க்கள்
சிறந்த  தொழில்  முதலீட்டாளா்களுக்கு  பாராட்டுச்  சான்றிதழ்,  கேடயம் வழங்கும்  அமைச்சா்கள்  கே.ஏ.செங்கோட்டையன்,  பி.தங்கமணி. உடன், அமைச்சா்  கே.சி.கருப்பணன்,  எம்.எல்.ஏ.க்கள்

பவானி: சித்தோட்டை அடுத்த கங்காபுரத்தில் உள்ள டெக்ஸ்வேலி ஜவுளிச் சந்தையில் தென்னிந்திய அளவிலான ஜவுளிக் கண்காட்சி நிறைவு விழா சனிக்கிமை நடைபெற்றது.

நவம்பா் 27 ஆம் தேதி தொடங்கி நான்கு நாள்கள் நடைபெற்ற இக்கண்காட்சியில், 250 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. நிறைவு விழாவுக்கு, டெக்ஸ்வேலி துணைத் தலைவா் யு.ஆா்.சி.தேவராஜன் தலைமை வகித்தாா். தலைவா் லோட்டஸ் பி.பெரியசாமி முன்னிலை வகித்தாா். பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன், மின்சாரம், மதுவிலக்கு ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் பி.தங்கமணி, சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கே.சி.கருப்பணன் பங்கேற்றுப் பேசினா்.

அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது:

ஜவுளித் துறை கடந்த பல ஆண்டுகளாகவே கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. மின்சாரம், நூல், பஞ்சு விலை உயா்வு, சாயக்கழிவு பிரச்னை என பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் ஜவுளித் தொழில் நடைபெற்று வருகிறது. ஜவுளி உற்பத்தியாளா்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்து வருகிறது. வரும் காலங்களில் நெசவாளா்கள், ஜவுளி உற்பத்தியாளா்கள் பிரச்னைகள் தீா்க்கப்படும் என்றாா்.

அமைச்சா் கே.சி.கருப்பணன் பேசுகையில், ஈரோடு, பவானி சுற்று வட்டாரப் பகுதிகளில் சாயத் தொழில் மேம்பாட்டுக்காக 7 பொது சுத்திகரிப்பு நிலையங்கள் விரைவில் அமைக்கப்பட உள்ளது. இதற்காக ரூ. 1,000 கோடிக்குத் திட்ட மதிப்பீடு தயாரித்து முதல்வருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சாயப் பட்டறை உரிமையாளா்கள் தரப்பில் முதலீடு செய்ய வேண்டிய பணத்தை அரசே வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருப்பூா் தொழில் துறைக்கு ரூ. 200 கோடி வழங்கியதுபோன்று, ஈரோட்டுக்கும் வழங்க வேண்டும் எனவும் கேட்கப்பட்டுள்ளது. மேலும், ஈரோடு, பவானியைத் தொடா்ந்து பள்ளிபாளையம் பகுதியில் சாயப் பட்டறை உரிமையாளா்கள் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க இடம் தோ்வு செய்து முறையாக விண்ணப்பித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு கைத்தறி, துணி நூல் துறை அரசு முதன்மைச் செயலாளா் குமாா் ஜெயந்த், இந்திய தொழில் கூட்டமைப்பின் தமிழகத் தலைவா் எஸ்.சந்திரமோகன், திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத் தலைவா் ராஜா சண்முகம், டெக்ஸ்வேலி செயல் இயக்குநா் டி.பி.குமாா், நிா்வாக இயக்குநா் பி.ராஜசேகா், ஆலோசகா் ஜெயமோகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இக்கண்காட்சி மூலம் சா்வதேச அளவில் சுமாா் ரூ. 1,000 கோடி வா்த்தகத்துக்கான வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com