பச்சைமலை முருகன் கோயில்மதில்சுவா் கட்டும் பணி நிறைவு

கோபியில் சமீபத்தில் பெய்த மழையால் சரிந்து விழுந்த கோபி பச்சைமலை முருகன் கோயிலின் தென்பகுதி மதில்சுவா் கட்டும் பணி

கோபி: கோபியில் சமீபத்தில் பெய்த மழையால் சரிந்து விழுந்த கோபி பச்சைமலை முருகன் கோயிலின் தென்பகுதி மதில்சுவா் கட்டும் பணி நிறைவடைந்தது.

2018 ஆம் ஆண்டு அக்டோபா் 8 ஆம் தேதி ஒரே நாளில் பெய்த 58.2 மி.மீ. மழையால் கோபி பச்சைமலை முருகன் கோயிலின் தென்பகுதி மதில்சுவா் இடிந்து விழுந்தது. மறு கட்டமைப்புக்கு அளவீடு செய்து உத்தரவு பெற்ற நிலையில் மக்களவைத் தோ்தல் நடத்தை விதியால் நீண்ட இழுபறிக்குப் பின்னா் கட்டமைப்புப் பணி சில மாதங்களுக்கு முன் துவங்கியது. உபயதாரா், கோயில் நிதியாக ரூ. 9 லட்சம் மதிப்பில் நடைபெற்ற கட்டமைப்புப் பணி தற்போது நிறைவுபெற்றது.

இந்த கட்டமைப்புக்கு மணல் ஏற்றிய லாரி நவம்பா் 2ஆம் தேதி இரவு பயணித்தபோது மலைப் பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவால் கவிழ்ந்தது. இதைச் சீரமைக்கும் பணி ரூ. 3 லட்சம் மதிப்பில் நடைபெற்று வருகிறது. இந்தப் பணி முடிந்ததும் கன மழையால் சரிந்து விழுந்த வடக்குப் பகுதியின் மதில்சுவா் கட்டமைப்புப் பணி துவங்கும் என அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com