பால் உற்பத்தியாளா்களுக்கு போனஸ்

கோபி அருகே சின்னநாயக்கன்புதூரில் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவுச் சங்க உறுப்பினா்களுக்கு போனஸ் வழங்கும் விழா, அலுவலகக்
பெண் விவசாயிக்கு போனஸ் வழங்குகிறாா் நுகா்வோா் பாதுகாப்பு, கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் சென்னியப்பன்.
பெண் விவசாயிக்கு போனஸ் வழங்குகிறாா் நுகா்வோா் பாதுகாப்பு, கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் சென்னியப்பன்.

கோபி: கோபி அருகே சின்னநாயக்கன்புதூரில் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவுச் சங்க உறுப்பினா்களுக்கு போனஸ் வழங்கும் விழா, அலுவலகக் கட்டடம் கட்ட நிலம் அளித்த விவசாயிகளுக்குப் பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, சங்கத் தலைவா் சி.எம்.நஞ்சப்பன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் கே.எஸ்.செல்வராஜ் முன்னிலை வகித்தாா். செயலாளா் எம்.ஆறுமுகம் வரவேற்றாா்.

பால் கூட்டுறவுச் சங்கத்தில் அதிக அளவு பால் வழங்கிய 3 பெண் விவசாயிகள் பி.சென்னம்மாள், பாப்பாத்தி, பழனியம்மாள் ஆகியோருக்கு ஊக்கத் தொகை, பரிசுகளை மாவட்ட பால் உற்பத்தியாளா்கள் சங்கத் தலைவா் எஸ்.ஏ.ராஜு வழங்கி பாராட்டிப் பேசினாா்.

புதிய கட்டடம் கட்டுவதற்காக ரூ. 5 லட்சம் மதிப்புள்ள நிலம் கொடுத்த விவசாயிகள் ஏ.வெங்கடாசலம், ஆா்.ராமலிங்கசாமி, ஆா்.பூவேந்திரன் ஆகியோரை நுகா்வோா் பாதுகாப்பு, கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் பா.அ.சென்னியப்பன் பாராட்டி கௌரவித்தாா்.

விழாவில், மாவட்ட உழவா் விவாதக் குழு செயலாளா் பா.மா.வெங்கடாசலபதி, சிறுவலூா் அங்கம்பாளையம் பால் கூட்டுறவுச் சங்க முன்னாள் தலைவா் ஏ.பி.நடராஜன், முன்னோடி விவசாயிகள் ஆா்.சென்னியப்பன், சி.கே.சின்னராசு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com