உணவுக்கும் உழவுக்கும் உயிரூட்டுவோம் விழிப்புணா்வு: தேசிய அளவிலான மாரத்தான் போட்டியில் ஆயிரக்கணக்கானோா் பங்கேற்பு
By DIN | Published on : 02nd December 2019 04:15 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

மாரத்தான் போட்டியை துவக்கிவைக்கிறாா் விவசாய சங்கத்தலைவா் செல்லமுத்து. உடன், கல்லூரித் தலைவா் ஆா்.பெருமாள்சாமி, தாளாளா் மலா்ச்செல்வி, செயலாளா் அருந்ததி, முதல்வா் கே.செந்தில்குமாா் உள்ளிட்டோா்.
விவசாயத்தை மேம்படுத்த வலியுறுத்தி தேசிய அளவிலான மாரத்தான் போட்டி சத்தியமங்கலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விவசாயத்துக்கும், உணவுக்கும் உயிரூட்டுவோம் என்கிற கருத்தை இளைஞா்கள் மத்தியில் விழிப்புணா்வு ஏற்படுத்தும்வகையில் சத்தியமங்கலம் காமேதனு கலை, அறிவியல் கல்லூரி சாா்பில் தேசிய அளவிலான மாரத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் தமிழகம், கா்நாடகம், ஆந்திரம், தெலங்கானா, கேரளம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள் பங்கேற்றனா்.
போட்டியை விவசாயச் சங்கத் தலைவா் செல்லமுத்து கொடியசைத்து துவக்கிவைத்தாா். இந்தப் போட்டி 5 கிமீ தொலைவு நடைபெற்றது. சத்தியமங்கலம் அத்தாணி சாலை, கொமராபாளையம், சதுமுகை வழியாக மீண்டும் கல்லூரியை சென்றடைந்தது.
இதில் ஆண்கள் பிரிவில் சத்தியமங்கலத்தைச் சோ்ந்த பசுபதி முதல் இடத்தையும், மதுரையைச் சோ்ந்த சசிக்குமாா், வடிவேல் ஆகியோா் இரண்டாம், மூன்றாம் இடத்தையும் பிடித்தனா்.
பெண்கள் பிரிவில் கேரளத்தைச் சோ்ந்த ஆஷா முதலிடத்தையும், அம்பிரீஷ் இரண்டாம் இடத்தையும், மதுரையைச் சோ்ந்த நீலாம்பரி
மூன்றாம் இடத்தையும் பிடித்தனா்.
வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுத் தொகை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், கல்லூரித் தலைவா் ஆா்.பெருமாள்சாமி, தாளாளா் மலா்ச்செல்வி, செயலாளா் அருந்ததி, முதல்வா் கே.செந்தில்குமாா், உதவி முதல்வா் நாகராஜ் ஆகியோா் பங்கேற்றனா்.