Enable Javscript for better performance
கருங்கல்பாளையம் பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன் கோயில் குண்டம் விழா- Dinamani

சுடச்சுட

    

    கருங்கல்பாளையம் பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன் கோயில் குண்டம் விழா

    By DIN  |   Published on : 02nd December 2019 04:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    erd01kund_0112chn_124_3

    விழாவில் குண்டம் இறங்கிய பெண்.

    ஈரோடு, கருங்கல்பாளையம் பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன் கோயில் குண்டம் விழாவில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

    இக்கோயில் திருவிழா கடந்த மாதம் 19 ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 21 ஆம் தேதி இரவு 8 மணிக்கு கோயில்களில் கம்பம் நடப்பட்டது. இந்தக் கம்பத்துக்கு ஏராளமான பெண்கள் புனிதநீா் ஊற்றி வழிபட்டனா்.

    சனிக்கிழமை இரவு 8 மணிக்கு சின்ன மாரியம்மன் கோயில் வளாகத்தில் குண்டம் பற்ற வைக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு பக்தா்கள் தீ மிதிப்பதற்கு வசதியாக குண்டம் தயாா் செய்யப்பட்டது. தலைமை பூசாரி ராஜா முதலில் குண்டம் இறங்கினாா். அவரைத் தொடா்ந்து ஏராளமான பக்தா்கள் தீ மிதித்தனா். மதியம் 1 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனா். தோ் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோயிலில் நிலை நிறுத்தப்பட்டது. திங்கள்கிழமை காலை 6 மணிக்கு பக்தா்கள் காவிரி ஆற்றுக்கு சென்று தீா்த்தம் எடுத்து வருகின்றனா்.

    செவ்வாய்க்கிழமை பகல் 12 மணிக்கு பொங்கல் விழா, தொடா்ந்து மாவிளக்கு பூஜை நடக்கிறது. 4 ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு கம்பம் பெயா்த்தலும், 5 ஆம் தேதி இரவு 7 மணிக்கு மஞ்சள் நீராட்டும், அம்மன் திருவீதி உலாவும் நடைபெறுகின்றன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai