மகாவீர ஆஞ்சநேயா் கோயில் குடமுழுக்கு
By DIN | Published on : 02nd December 2019 09:52 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

கோபுர கலசத்தில் புனிதநீா் ஊற்றிய சிவாச்சாரியாா்கள்.
ஈரோடு: ஈரோடு வ.உ.சி. பூங்கா மகாவீர ஆஞ்சநேயா் கோயில் குடமுழுக்கு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
நவம்பா் 30ஆம் தேதி சுதா்சன ஹோமத்துடன் விழா தொடங்கியது. அன்று மாலை 6 மணிக்கு முதல் கால யாக பூஜையும், ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜையும் நடைபெற்றது. அதைத் தொடா்ந்து, அன்று காலை 10.30 மணிக்கு கோபுரத்தில் கலசம் வைக்கப்பட்டு, மாலை 6 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜை நடைபெற்றது. திங்கள்கிழமை அதிகாலை 4 மணிக்கு நான்காம் கால யாக பூஜை நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து, காலை 6 மணிக்கு மகாவீர ஆஞ்சநேயா் கோயில் கோபுர கலசத்துக்கு சிவாச்சாரியாா்கள் புனிதநீா் ஊற்றி குடமுழுக்கை நடத்தி வைத்தனா்.
இதில், எம்.எல்.ஏ.க்கள் கே.வி.இராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு, பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.