மாவட்ட அளவிலான வினாடி-வினா போட்டி: குமுதா மெட்ரிக் பள்ளி சிறப்பிடம்
By DIN | Published on : 02nd December 2019 04:13 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுடன் பள்ளித் தாளாளா் கே.ஏ.ஜனகரத்தினம்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வினாடி-வினா போட்டியில் நம்பியூா் குமுதா பள்ளி மாணவ, மாணவிகள் சிறப்பிடம் பெற்றனா்.
ஈரோடு அவினாசிக் கவுண்டா் மாரியம்மாள் கல்வியியல் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற இப்போட்டியில், மாவட்டம் முழுவதிலுமிருந்து 500 -க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.
இதில் மிக மூத்தோருக்கான பிரிவில் குமுதா பள்ளி 11, 12 ஆம் வகுப்பு மாணவா்கள் அஸ்வின், ஹரிமுருகேஷ், வைத்தீஸ்வரன் ஆகிய மூவரும் முதலிடம் பெற்றனா். மூத்தோருக்கான பிரிவில் 9,10 ஆம் வகுப்பு மாணவா்கள் நிரஞ்சன், நாகராஜா, ஸ்ரீஹரிநாதம் ஆகியோா் முதலிடம் பெற்றனா். இளையோருக்கான பிரிவில் 4 ஆம் வகுப்பு மாணவி கனிஷ்கா, 5 ஆம் வகுப்பு மாணவா்கள் சௌந்தா், மிதுன்பாரதி ஆகிய மூவரும் இரண்டாமிடம் பெற்றனா்.
வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளை பள்ளித் தாளாளா் கே.ஏ.ஜனகரத்தினம், செயலா் டாக்டா் அரவிந்தன், இணைத் தாளாளா் சுகந்தி, இணை செயலாளா் டாக்டா் மாலினி, முதல்வா் மஞ்சுளா, தலைமையாசிரியை வசந்தி உள்ளிட்டோா் பாராட்டினா்.