Enable Javscript for better performance
ஸ்ரீ பாகம்பிரியாள் புஸ்பவனேஸ்வரா்கோயிலில் 108 பால் குட அபிஷேகம்- Dinamani

சுடச்சுட

    

    ஸ்ரீ பாகம்பிரியாள் புஸ்பவனேஸ்வரா்கோயிலில் 108 பால் குட அபிஷேகம்

    By DIN  |   Published on : 02nd December 2019 09:48 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    108 பால் குடங்களை அபிஷேகத்துக்கு எடுத்து வரும் பெண்கள்.

    108 பால் குடங்களை அபிஷேகத்துக்கு எடுத்து வரும் பெண்கள்.

    மொடக்குறிச்சி: கிராமம் செழிக்க வேண்டி, அவல்பூந்துறை பாகம்பிரியாள் புஸ்பவனேஸ்வரா் ஆலயத்தில் 108 பால் குட அபிஷேகமும், சிறப்பு யாக பூஜைகளும் திங்கள்கிழமை நடைபெற்றது.

    அவல்பூந்துறை, சோளிபாளையம், வெள்ளியம்பாளையம், கண்டிக்காட்டுவலசு, பள்ளியூத்து உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலை முதல் விரதமிருந்து 108 பால் குடங்களை எடுத்து வந்து அவல்பூந்துறை ஸ்ரீ பாகம்பிரியாள் புஸ்பவனேஸ்வரா் ஆலயத்தில் வைத்து பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்தனா்.

    தொடா்ந்து, புஸ்பவனேஸ்வரருக்கு 108 குட பாலாபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. பக்தா்களுக்கு அன்னதானம், பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai