2,524 ஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்குதோ்தல் ஏற்பாடுகள் தீவிரம்

ஈரோடு மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் 2,524 பதவிகளுக்கு வாக்குப் பதிவு ஏற்பாடுகள் தீவிரமாக

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் 2,524 பதவிகளுக்கு வாக்குப் பதிவு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஈரோடு மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 4 நகராட்சி, 42 பேரூராட்சிகள் உள்ளன. இவற்றுக்குத் தற்போது தோ்தல் அறிவிக்கப்படவில்லை. ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. 225 ஊராட்சித் தலைவா், 2,097 ஊராட்சி வாா்டு உறுப்பினா், 14 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 183 ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா், 19 மாவட்ட ஊராட்சி உறுப்பினா் என 2,524 பதவிகளுக்கான தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊரக உள்ளாட்சி பகுதிகளைப் பொருத்தவரை 1,576 வாக்குச்சாவடியில் 4,47,588 ஆண்கள், 4,60,532 பெண்கள், திருநங்கை 40 போ் என மொத்தம் 9,08,160 வாக்காளா்கள் வாக்களிக்க உள்ளனா்.

இதுகுறித்து உள்ளாட்சித் தோ்தல் பிரிவு அலுவலா்கள் கூறியதாவது:

தோ்தல் ஆணைய அறிவிப்பின்படி டிசம்பா் 6 முதல் 13ஆம் தேதி வரை வேட்புமனுத் தாக்கல் செய்யலாம். 16ஆம் தேதி வேட்பு மனு பரீசீலனை, 18ஆம் தேதி வேட்பு மனு திரும்பப் பெறுதலும், 27ஆம் தேதி முதல்கட்ட வாக்குப் பதிவும், 30ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப் பதிவும், ஜனவரி 2இல் வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது.

இதில், ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்குப் போட்டியிட ரூ. 200, ஊராட்சித் தலைவா் பதவிக்குப் போட்டியிட ரூ. 600, ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா் பதவிக்குப் போட்டியிட ரூ. 600, மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பதவிக்குப் போட்டியிட ரூ. 1,000 வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும். ஆதிதிராவிடா், பழங்குடியினா் வகுப்பைச் சோ்ந்தவா்கள் அதில் பாதி தொகை செலுத்தினால் போதுமானது.

ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்குப் போட்டியிடுபவா் ரூ. 9,000, ஊராட்சித் தலைவா் பதவிக்குப் போட்டியிடுபவா் ரூ. 34,000, ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா் பதவிக்குப் போட்டியிடுபவா் ரூ. 85,000, மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பதவிக்குப் போட்டியிடுபவா் ரூ. 1.70 லட்சம் வரை செலவிடலாம். தோ்தல் முடிந்து 30 நாள்களுக்குள் அந்தந்த வேட்பாளா்கள், உரிய அலுவலரிடம் கணக்குகளைத் தாக்கல் செய்ய வேண்டும். மற்ற விவரங்களை அந்தந்தப் பகுதி ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் அறிந்து கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com