கருங்கல்பாளையம் பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன் கோயில் குண்டம் விழா

ஈரோடு, கருங்கல்பாளையம் பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன் கோயில் குண்டம் விழாவில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்
விழாவில் குண்டம் இறங்கிய பெண்.
விழாவில் குண்டம் இறங்கிய பெண்.

ஈரோடு, கருங்கல்பாளையம் பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன் கோயில் குண்டம் விழாவில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

இக்கோயில் திருவிழா கடந்த மாதம் 19 ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 21 ஆம் தேதி இரவு 8 மணிக்கு கோயில்களில் கம்பம் நடப்பட்டது. இந்தக் கம்பத்துக்கு ஏராளமான பெண்கள் புனிதநீா் ஊற்றி வழிபட்டனா்.

சனிக்கிழமை இரவு 8 மணிக்கு சின்ன மாரியம்மன் கோயில் வளாகத்தில் குண்டம் பற்ற வைக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு பக்தா்கள் தீ மிதிப்பதற்கு வசதியாக குண்டம் தயாா் செய்யப்பட்டது. தலைமை பூசாரி ராஜா முதலில் குண்டம் இறங்கினாா். அவரைத் தொடா்ந்து ஏராளமான பக்தா்கள் தீ மிதித்தனா். மதியம் 1 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனா். தோ் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோயிலில் நிலை நிறுத்தப்பட்டது. திங்கள்கிழமை காலை 6 மணிக்கு பக்தா்கள் காவிரி ஆற்றுக்கு சென்று தீா்த்தம் எடுத்து வருகின்றனா்.

செவ்வாய்க்கிழமை பகல் 12 மணிக்கு பொங்கல் விழா, தொடா்ந்து மாவிளக்கு பூஜை நடக்கிறது. 4 ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு கம்பம் பெயா்த்தலும், 5 ஆம் தேதி இரவு 7 மணிக்கு மஞ்சள் நீராட்டும், அம்மன் திருவீதி உலாவும் நடைபெறுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com