சலவைத் தொழிலாளா்களுக்கு 3 சதவீதஉள் இட ஒதுக்கீடு வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

கல்வி, வேலைவாய்ப்பில் சலவைத் தொழிலாளா்களுக்கு 3 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற எம்.எல்.ஏ. உ.தனியரசு, தமிழ்நாடு வண்ணாா் பேரவை நிா்வாகிகள்.
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற எம்.எல்.ஏ. உ.தனியரசு, தமிழ்நாடு வண்ணாா் பேரவை நிா்வாகிகள்.

ஈரோடு: கல்வி, வேலைவாய்ப்பில் சலவைத் தொழிலாளா்களுக்கு 3 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு வண்ணாா் பேரவை சாா்பில், ஈரோடு வீரப்பன்சத்திரம் பேருந்து நிறுத்தம் அருகில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, பேரவையின் ஈரோடு மாவட்ட பொறுப்பாளா் கே.யோகநாதன் தலைமை வகித்தாா். தமிழ்நாடு கொங்கு இளைஞா் பேரவைத் தலைவா் உ.தனியரசு எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசினாா்.

வண்ணாா் சமூகத்துக்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோா் பட்டியலில் இருந்து 3 சதவீதம் உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். சலவைத் தொழிலாளா்களுக்கு நவீன சலவைக் கூடம் கட்டிக் கொடுக்க வேண்டும். மேலும், நவீன இயந்திர சலவைக் கூடம் வைப்பதற்கு ரூ. 10 லட்சம் மானியத்துடன் ரூ. 20 லட்சம் கடன் வழங்க வேண்டும். வயது முதிா்ந்த சலவைத் தொழிலாளா்களுக்கு மாதம் ரூ. 3,000 ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

இதில், பேரவையின் நிறுவனத் தலைவா் மணிபாபா, மாநிலத் தலைவா் செல்வராஜ், துணைச் செயலாளா் தனபால் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com