பெருந்துறையில் எய்ட்ஸ் தினவிழிப்புணா்வுப் பேரணி

உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி, எம்.ஜி.ஆா். மருத்துவ பல்கலைக் கழகம், பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி, நாட்டு நலப்பணித் திட்டம்
பேரணியைத் துவக்கி வைக்கிறாா் சட்டப் பேரவை உறுப்பினா்
பேரணியைத் துவக்கி வைக்கிறாா் சட்டப் பேரவை உறுப்பினா்

பெருந்துறை: உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி, எம்.ஜி.ஆா். மருத்துவ பல்கலைக் கழகம், பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி, நாட்டு நலப்பணித் திட்டம் ஆகியோா் இணைந்து எய்ட்ஸ் நோய் குறித்து மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, பெருந்துறை மருத்துவக் கல்லூரி முதல்வா் மருத்துவா் எம்.ராஜேந்திரன் தலைமை வகித்தாா். மருத்துவக் கல்லூரி வளாகத்தில் துவங்கிய பேரணியை, பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினா் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் துவக்கிவைத்தாா்.

பேரணியானது, கல்லூரி வளாகத்தில் துவங்கி குன்னத்தூா் சாலை, ஈரோடு சாலை, வட்டாட்சியா் அலுவலகம், காவல் நிலையம் வழியாகச் சென்று அரசு மருத்துவமனை அருகில் நிறைவடைந்தது.

பேரணியில், விழிப்புணா்வுப் பதாகைகள் ஏந்திக் கொண்டு மருத்துவக் கல்லூரியின் 200 மாணவ, மாணவிகள், செவிலியா் பள்ளியின் 60 மாணவிகள், மருத்துவக் கல்லூரிப் பேராசிரியா்கள், மருத்துவா்கள், பணியாளா்கள், பெருந்துறை ரோட்டரி சங்க நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். மேலும், பொதுமக்களுக்கு விழிப்புணா்வுத் துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com