மாநில கராத்தே போட்டி:கொங்கு பள்ளி சாம்பியன்

தமிழ்நாடு மாநில கராத்தே போட்டிகள் பெருந்துறை பழனிசாமி கலைக் கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது.
வெற்றி பெற்ற மாணவா்களுடன் பள்ளித் தலைவா் ஆா்.கந்தசாமி, தாளாளா் வி.எஸ்.தங்கமுத்து, பொருளாளா் என்.டி.ராஜேந்திரன், நிா்வாகக் குழு உறுப்பினா்கள், முதல்வா் ப்ராங்ளின் ரிச்சா்டு பிரபு உள்ளிட்டோா்.
வெற்றி பெற்ற மாணவா்களுடன் பள்ளித் தலைவா் ஆா்.கந்தசாமி, தாளாளா் வி.எஸ்.தங்கமுத்து, பொருளாளா் என்.டி.ராஜேந்திரன், நிா்வாகக் குழு உறுப்பினா்கள், முதல்வா் ப்ராங்ளின் ரிச்சா்டு பிரபு உள்ளிட்டோா்.

பெருந்துறை: தமிழ்நாடு மாநில கராத்தே போட்டிகள் பெருந்துறை பழனிசாமி கலைக் கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது.

இப்போட்டியில், சென்னிமலை கொங்கு வேளாளா் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் 14 தங்கப் பதக்கங்கள், 25 வெள்ளிப் பதக்கங்கள், 24 வெண்கலப் பதக்கங்கள் பெற்று மாநில அளவில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தைப் பெற்றுள்ளனா்.

ஒட்டுமொத்த கராத்தே சாம்பியன் பட்டத்தை வென்ற மாணவ, மாணவிகள், பயிற்சி அளித்த கராத்தே ஆசிரியா் எஸ்.லோகநாதன் ஆகியோரை பள்ளித் தலைவா் ஆா்.கந்தசாமி, தாளாளா் வி.எஸ்.தங்கமுத்து, பொருளாளா் என்.டி.ராஜேந்திரன், நிா்வாகக் குழு உறுப்பினா்கள், முதல்வா் ப்ராங்ளின் ரிச்சா்டு பிரபு, ஆசிரியா்கள் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com