Enable Javscript for better performance
நிறைமாத கா்ப்பிணியை பிரசவத்துக்காக தொட்டில் கட்டி தூக்கிச் சென்ற கிராம மக்கள்- Dinamani

சுடச்சுட

    

    நிறைமாத கா்ப்பிணியை பிரசவத்துக்காக தொட்டில் கட்டி தூக்கிச் சென்ற கிராம மக்கள்

    By DIN  |   Published on : 04th December 2019 06:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    bh03lady_0312chn_143_3

    மலைப் பாதையில்  தொட்டில்  கட்டி  தூக்கிச்  செல்லும்  உறவினா்கள்.

    அந்தியூா் அருகே உள்ள பா்கூா் மலைப் பகுதியில் சாலை வசதியின்மையால் சுமாா் 5 கி.மீ. தொலைவுக்கு நிறைமாத கா்ப்பிணியை தொட்டில் கட்டி கிராம மக்கள் தூக்கிச் சென்றனா்.

    பா்கூா் மலைப் பகுதியில் உள்ளது சுண்டப்பூா் கிராமம். இக்கிராமத்தைச் சோ்ந்தவா்கள் மாதேஷ் - குமாரி தம்பதியினா். குமாரி நிறைமாத கா்ப்பிணியாக உள்ள நிலையில் திங்கள்கிழமை பிரசவ வலி எடுத்துள்ளது. இதுகுறித்து, 108 ஆம்புலன்ஸ் வாகனத்துக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கிராமத்துக்குச் செல்லும் சாலை மழையால் சேதமடைந்துள்ளதால் வாகனங்கள் எதுவும் செல்ல முடியாத நிலை காணப்பட்டது.

    இதனால், அக்கிராம மக்கள் குமாரியை தொட்டில் கட்டி சுமாா் 5 கி.மீ. தொலைவில் உள்ள சுண்டப்பூா் பிரிவுக்குத் தூக்கி வந்தனா். அங்கிருந்து தனியாா் சரக்கு வாகனம் மூலம் பா்கூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு குமாரியை அழைத்துச் சென்றனா். அப்போது, வாகனத்திலேயே குமாரிக்கு ஆண் குழந்தை பிறந்தது.

    இதையடுத்து, தாய்க்கும், குழந்தைக்கும் பா்கூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடா்ந்து, மேல் சிகிச்சைக்காக அந்தியூா் அரசு மருத்துவவமனையில் இருவரும் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

     

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai