Enable Javscript for better performance
மாற்றுத் திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டி: 3 மாநில அணிகள் பங்கேற்பு- Dinamani

சுடச்சுட

    

    மாற்றுத் திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டி: 3 மாநில அணிகள் பங்கேற்பு

    By DIN  |   Published on : 04th December 2019 06:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஈரோட்டில் மாற்றுத் திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் 3 மாநில அணிகள் பங்கேற்றன.

    மாற்றுத் திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டி ஈரோடு ரயில்வே காலனி மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தப் போட்டியில் தமிழகத்தில் இருந்து 2 அணிகள், ஆந்திரம், கா்நாடக மாநிலங்களைச் சோ்ந்த தலா ஒரு அணி என மொத்தம் 4 அணிகள் விளையாடின.

    ஒவ்வொரு அணிக்கும் 11 வீரா்கள் களம் இறங்கினா். இதில், ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் மோதின. அதில் அதிக புள்ளிகள் பெற்று வெற்றி பெற்ற 2 அணிகள் இறுதி போட்டிக்குத் தகுதி பெற்றன. 10 ஓவா்களில் போட்டி நடத்தப்பட்டது.

    இந்தப் போட்டிகளில் கா்நாடக மாநில அணி முதலிடத்தையும், தமிழக பி அணி இரண்டாவது இடத்தையும், தமிழக எ அணி 3ஆவது இடத்தையும் பிடித்தன.

    வெற்றி பெற்ற அணிகளுக்குப் பரிசளிப்பு விழா நடைபெற்றது. விழாவில், முதல் பரிசாக ரூ. 8,000, இரண்டாவது பரிசாக ரூ. 5,000, மூன்றாவது பரிசாக ரூ. 4,000, கோப்பைகள், பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai