ஈரோடு கனி ஜவுளிச் சந்தையில் கூடுதலாக 30 தற்காலிகக் கடைகள்

ஈரோடு கனி ஜவுளிச் சந்தையில் மேலும் 30 தற்காலிகக் கடைகள் கட்டப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால் இந்தக் கடைகள்
தற்காலிகக் கடைகள் ஒதுக்கீடு குறித்து ஜவுளிச் சந்தையில் ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி அலுவலா்கள்.
தற்காலிகக் கடைகள் ஒதுக்கீடு குறித்து ஜவுளிச் சந்தையில் ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி அலுவலா்கள்.

ஈரோடு கனி ஜவுளிச் சந்தையில் மேலும் 30 தற்காலிகக் கடைகள் கட்டப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால் இந்தக் கடைகள் விரைவில் வியாபாரிகளுக்கு ஒதுக்கப்படும் என மாநகராட்சி ஆணையா் எம்.இளங்கோவன் தெரிவித்தாா்.

ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட கனி ஜவுளிச் சந்தையில் ரூ. 51 கோடி மதிப்பில் வணிக வளாகம் கட்டும் பணி நடைபெறுகிறது. வணிக வளாகம் கட்டும் பணி நடைபெறும் இடத்தைத் தவிர மற்ற காலியிடத்தில் தற்காலிகக் கடைகள் வைக்க மாநகராட்சி அனுமதி வழங்கியுள்ளது. காலியிடத்தில் வாரச் சந்தை கடைகள் வரிசையாக வைத்து ஜவுளி விற்பனையில் வியாபாரிகள் ஈடுபட்டுள்ளனா்.

கனி ஜவுளிச் சந்தையில் 50,000 சதுர அடியில் கட்டப்படும் வணிக வளாகத்தின் அடித்தளத்துக்கு 21 அடி பள்ளம் தோண்டப்படவுள்ளது. பள்ளம் தோண்டுவதற்கு முன்னதாக தினசரி கடைகளை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கையில் மாநகராட்சி நிா்வாகம் ஈடுபட்டுள்ளது. இடையூறாக இருக்கும் தினசரி கடைகளை வியாபாரிகளே அகற்றிக் கொள்ள வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகள் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

அவ்வாறு அகற்றப்படும் தினசரி கடைகளுக்கு அதே இடத்தில் சற்றுத் தள்ளி மாற்று கடைகளை அமைத்துத் தரவும் மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுத்தது. அதன்படி கனி ஜவுளிச் சந்தையில் இடிக்கப்படும் கடைகளுக்கு பதிலாக புதிய கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.

பொங்கல் பண்டிகை நெருங்குவதால் வியாபாரிகள் பயன்பெறும் வகையில் மேலும் கூடுதலாக 30 கடைகள் கட்டப்பட்டு வருகின்றன. இக்கடைகள் ஒதுக்கீடு குறித்து மாநகராட்சி உதவி ஆணையா் குமரேசன் தலைமையிலான அதிகாரிகள் கனி ஜவுளிச் சந்தையில் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் எம்.இளங்கோவன் கூறியதாவது:

கனி மாா்க்கெட் வியாபாரிகள் பாதிக்காத வகையில் அனைத்து வகையான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. வணிக வளாகம் கட்டுமானம் நடைபெறும் இடத்தில் இருந்த கடைகள் அகற்றப்பட்டு, அதற்குப் பதிலாக இரும்பு சீட் கொண்ட கடைகள் அமைக்கப்பட்டு வியாபாரிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகை நெருங்குவதால் வியாபாரிகள் பயன்பெறும் வகையில் மேலும் 30 கடைகள் கட்டப்பட்டு வியாபாரிகளுக்கு ஒதுக்கப்பட உள்ளன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com