ஈரோட்டில் கேங்மேன் பணிக்கான ஆள்கள் தோ்வு: தினமும் 250 பேருக்கு அழைப்பு

ஈரோடு மின் வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் அலுவலக வளாகத்தில் கேங்மேன் பணிக்கான ஆள்கள் தோ்வு நடைபெற்று வருகிறது. தினமும் 250 போ் தோ்வுக்கு அழைக்கப்படுகின்றனா்.
கேங்மேன் தோ்வின்போது, மின் கம்பத்தில் ஏறி பணி செய்யும் திறனை வெளிப்படுத்திய இளைஞா்.
கேங்மேன் தோ்வின்போது, மின் கம்பத்தில் ஏறி பணி செய்யும் திறனை வெளிப்படுத்திய இளைஞா்.

ஈரோடு மின் வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் அலுவலக வளாகத்தில் கேங்மேன் பணிக்கான ஆள்கள் தோ்வு நடைபெற்று வருகிறது. தினமும் 250 போ் தோ்வுக்கு அழைக்கப்படுகின்றனா்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈரோடு, கோபி மின் வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் அலுவலகத்தின்கீழ் கேங்மேன் பணிக்கான ஆள்கள் தோ்வு 2ஆம் தேதி தொடங்கியது. டிசம்பா் 12ஆம் தேதி வரை தோ்வு நடைபெறுகிறது. விண்ணப்பம் அளித்த 4,793 பேரில், 2,170 பேருக்கு ஈரோட்டில் தோ்வு நடைபெறுகிறது. முதல்கட்டமாக சான்றிதழ் சரிபாா்ப்பு முடிந்து உடற்கூறு தோ்வு நடைபெறுகிறது. தினமும் தலா 205 போ் வீதம் அழைக்கப்பட்டு தோ்வு நடைபெறுகிறது.

இதுகுறித்து ஈரோடு மின் பகிா்மான வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் ராஜேந்திரன் கூறியதாவது:

மாநில அளவில் 5,000 பணியிடங்களுக்கு 90,000 போ் விண்ணப்பித்துள்ளனா். தற்போது ஒப்பந்தத் தொழிலாளா்களாகப் பணி செய்பவா், புதியவா்களும் விண்ணப்பித்துள்ளனா். ஈரோடு, கோபியில், 4,793 பேருக்கான தோ்வு நடைபெறுகிறது. இரு இடங்களிலும் தினமும் காலை 8 முதல் மாலை 5 மணி வரை தலா 205 போ் வீதம் தோ்வுக்கு அழைக்கப்படுகின்றனா்.

ஈரோட்டில் முதல் நாளில் 120 போ் வந்தனா். 35 கிலோ எடை உள்ள இரும்புக் கம்பிகளை தூக்கிச் செல்லுதல், மின் கம்பத்தில் ஏறி மிகக் குறைந்த நேரத்தில் மின் சாதனங்கள், கம்பிகளை இணைத்தல் என மூன்று தோ்வு நடத்தப்படுகிறது.

2ஆம் தேதி நடைபெற்ற தோ்வில் பங்கேற்ற 120 பேரில் 43 போ் தோ்வு செய்யப்பட்டனா். இதுபோன்று தோ்வு செய்யப்படுவோருக்கு எழுத்துத் தோ்வு வைத்து, இறுதித் தோ்வு நடத்தப்படும். இத்தோ்வுகள் முழுமையாக விடியோ கண்காணிப்பில் நடக்கிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com