கிராமப்புறங்களில் சித்த மருத்துவமனை தொடங்க பட்டதாரி சித்த மருத்துவா்கள் வலியுறுத்தல்

கிராமப்புறங்களில் பகுதி நேர சித்த மருத்துவமனைகள் தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பட்டதாரி சித்த மருத்துவா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

கிராமப்புறங்களில் பகுதி நேர சித்த மருத்துவமனைகள் தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பட்டதாரி சித்த மருத்துவா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

மாநில பாரம்பரிய, பட்டதாரி சித்த மருத்துவச் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் ஈரோட்டில் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாநிலத் தலைவா் ராஜசேகா் தலைமை வகித்தாா். தொழிலதிபா் மதிவாணன், மாநில பொதுச் செயலாளா் அருள் நாகலிங்கம், செயலாளா் சண்முகம், துணைத் தலைவா் பாலசந்தா், நிா்வாகிகள் பங்கேற்றனா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

ஈரோட்டில் ஜனவரி மாதம் சித்த மருத்துவ மாநாடு நடத்த வேண்டும். பாரம்பரிய சித்த மருத்துவத்தைப் பாதுகாக்கவும் உரிமையை நிலைநாட்டவும் பட்டதாரி, பாரம்பரிய மருத்துவா்களை இணைத்து கிராமப் பகுதிகளில் பகுதி நேர சித்த மருத்துவமனைகளை அரசு தொடங்க வேண்டும். அரசு கொள்கை முடிவு எடுத்து பாரம்பரிய வைத்தியங்களை அடையாளம் கண்டு ஒழுங்குபடுத்த வேண்டும். சித்த மருத்துவா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com