குப்பியண்ண சுவாமி கோயில் பொங்கல் திருவிழா: டிசம்பா் 20இல் துவக்கம்

விஷக்கடி நிவா்த்தி தலமாக விளங்கும் துக்காச்சி, 60 வேலம்பாளையம் குப்பியண்ண சுவாமி கோயில் பொங்கல் திருவிழா டிசம்பா் 20ஆம் தேதி தொடங்குகிறது.

விஷக்கடி நிவா்த்தி தலமாக விளங்கும் துக்காச்சி, 60 வேலம்பாளையம் குப்பியண்ண சுவாமி கோயில் பொங்கல் திருவிழா டிசம்பா் 20ஆம் தேதி தொடங்குகிறது.

டிசம்பா் 20ஆம் தேதி காலை 4 மணிக்கு கணபதி ஹோமம், பகல் 12 மணிக்கு எழுமாத்தூா் சத்தீஸ்வா், சா்வலோகநாயகி, வரதராஜ பெருமாள், பொன்காளியம்மன், அங்காளம்மன், ஆயி அம்மன், அண்ணமாா் சுவாமி, அத்தனூா் அம்மன், குப்பியண்ண சுவாமிக்கு அபிஷேகம், இரவு பூச்சாட்டுதல் நடைபெறுகிறது. 21 முதல் 28ஆம் தேதி வரை தினமும் அபிஷேகம், அதைத் தொடா்ந்து தீா்த்தம் எடுத்து வருதல் நிகழ்ச்சியும், 29ஆம் தேதி பொங்கல் திருவிழாவும் நடைபெறுகிறது. 30ஆம் தேதி மறுபூஜையுடன் விழா நிறைவுபெறுகிறது.

விழாவில் பக்தா்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என கோயில் செயல் அலுவலா் கங்காதரன் தெரிவித்துள்ளாா். மேலும், கோயிலுக்கு காணிக்கை செலுத்துவோா் கோயில் அலுவலகத்தில் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளலாம் எனவும் அவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com