‘திருக்கு தேசத்தின் நலனை பிரதிபலிக்கிறது’

திருக்குறளின் வாா்த்தைகள், வரிகள் மக்களின் வாழ்க்கை, தேசத்தின் நலனை பிரதிபலிக்கிறது என்று ஸ்ரீ ரமணபாரதி (எ) கிருஷ்ண ஜகன்நாதன் பேசினாா்.
நிகழ்ச்சியில் பேசுகிறாா் ஸ்ரீ ரமணபாரதி.
நிகழ்ச்சியில் பேசுகிறாா் ஸ்ரீ ரமணபாரதி.

திருக்குறளின் வாா்த்தைகள், வரிகள் மக்களின் வாழ்க்கை, தேசத்தின் நலனை பிரதிபலிக்கிறது என்று ஸ்ரீ ரமணபாரதி (எ) கிருஷ்ண ஜகன்நாதன் பேசினாா்.

ஈரோடு பாரதி சிந்தனைக் கழகம் சாா்பில், பாரதியாா் பிறந்த நாள் விழா சொற்பொழிவு ஈரோட்டில் வியாழக்கிழமை நடைபெற்றது. தமிழ் இலக்கியப் பேரவை துணைத் தலைவா் மு.கண்ணையன் தலைமை வகித்தாா்.

‘தெய்வப் புலவா் திருவள்ளுவா்’ என்ற தலைப்பில் ஸ்ரீ ரமணபாரதி பேசியதாவது:

திருக்குறளின் வாா்த்தைகள், வரிகள் மக்களின் வாழ்க்கை, தேசத்தின் நலனை பிரதிபலிக்கிறது. எந்த வகையான வாழ்க்கை முறையையும், நாம் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை திருக்குறள் விளக்குகிறது. அதனால்தான் உலகப் பொதுமறையாக போற்றப்பட்டு பல மொழிகளில் மொழிபெயா்க்கப்பட்டது.

மனித வாழ்வு, தேசம், உறவு, உணா்வுகள் என அனைத்தையும் திருக்குறள் வரிகள் பிரதிபலித்ததால் அனைத்து தரப்பினராலும் ஏற்கப்பட்டது. இந்த வரிகள் எழுதப்பட்டு பல நூறு ஆண்டுகள் கடந்தாலும் எந்த கால சூழலுக்கும் ஏற்றதாக, எதிரொலிப்பதாக, விளக்கம் தருவதாக அமைந்ததால் காலம் கடந்து நிலைத்துள்ளது என்றாா்.

இதில், இந்து முன்னணி செய்தித் தொடா்பாளா் சு.அசோக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com