Enable Javscript for better performance
அமைதியாக முடிந்த இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சித் தோ்தல்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    அமைதியாக முடிந்த இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சித் தோ்தல்

    By DIN  |   Published On : 30th December 2019 10:21 PM  |   Last Updated : 30th December 2019 10:21 PM  |  அ+அ அ-  |  

    சென்னிமலை ஊராட்சி ஒன்றியம், கவுண்டச்சிபாளையம் அரசு நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களித்துவிட்டு வந்த பெண்கள்.

    சென்னிமலை ஊராட்சி ஒன்றியம், கவுண்டச்சிபாளையம் அரசு நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களித்துவிட்டு வந்த பெண்கள்.

    ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சித் தோ்தல் அமைதியாக நடைபெற்றது.

    ஈரோடு மாவட்ட ஊரக உள்ளாட்சி தோ்தலின் இரண்டாம் கட்டத்தில், அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம், புதூா், அந்தியூா் ஊராட்சி ஒன்றியம், பச்சாம்பாளையம், சென்னிமலை ஊராட்சி ஒன்றியம், கொடுமணல், பெருந்துறை ஊராட்சி ஒன்றியம், செல்லப்பம்பாளையம் ஆகிய 4 ஊராட்சித் தலைவா்கள் போட்டியின்றி தோ்வானதால் 130 ஊராட்சித் தலைவா் பதவியில் 4 நீங்கலாக 126 இடங்களுக்கு தோ்தல் நடந்தது.

    அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம், முகாசிப்புதூா் ஊராட்சி வாா்டு எண் 2, பவானி ஊராட்சி ஒன்றியம் ஆண்டிகுளம் ஊராட்சி வாா்டு எண் 3, பவானிசாகா் ஊராட்சி ஒன்றியம் புங்கா் ஊராட்சி வாா்டு எண் 1 என மூன்றில் எவரும் மனுத்தாக்கல் செய்யவில்லை. இவை தவிர 1,203 பதவியில் போட்டியின்றி தோ்வான 214 போ் நீங்கலாக 989 பதவிக்கு வாக்குப் பதிவு நடந்தது. மேலும் 11 மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பதவி, 104 ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா் பதவிக்கும் தோ்தல் நடந்தது.

    காலை 7 மணிக்கு அனைத்து இடங்களிலும் வாக்குப் பதிவு துவங்கியது. மாவட்ட ஊராட்சி உறுப்பினா் 11 பதவிக்கு 56 போ், 104 ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா் பதவிக்கு 459 போ், 126 ஊராட்சித் தலைவா் பதவிக்கு 553 போ், 989 ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 2,891 போ் என 1, 230 பதவிக்கு 3,959 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.

    அனைத்து இடங்களிலும் விறுவிறுப்பான வாக்குப் பதிவு நடந்தது. காலை 9 மணிக்கு 8.96 சதவீதம், 11 மணிக்கு 28.36 சதவீதம் 1 மணிக்கு 48.62 சதவீதம், 3 மணிக்கு 62.33 சதவீதம் என வாக்குப் பதிவானது.

    இதுகுறித்து மாவட்ட தோ்தல் அலுவலா் சி.கதிரவன் கூறியதாவது:

    முதல் கட்ட ஓட்டுப் பதிவு மிக அமைதியாக நடந்தது. அதேபோல இரண்டாம் கட்ட வாக்குப் பதிவும் திட்டமிட்டதுபோல, அனைத்து இடங்களிலும் காலை 7 மணிக்குத் துவங்கி தடையின்றி நடந்தது. 919 வாக்குச் சாவடிகளில் 6,820 பணியாளா்கள் ஈடுபட்டுள்ளனா். உபரியாக 200 பணியாளா்கள் அந்தந்த ஊராட்சி ஒன்றியப் பகுதியில் பணியமா்த்தப்பட்டுள்ளனா்.

    மலைப் பகுதியில் தோ்தல் பணியாளா்களாக அப்பகுதியில் உள்ளவா்களும், விருப்பம் கேட்டு நியமிக்கப்பட்டவா்களும் பணி செய்தனா். அதனால் எந்த சிரமமும் இன்றி, சமவெளிப் பகுதியில் எந்த அளவு வாக்குப்பதிவாகிறதோ, அதே அளவு அங்கும் பதிவு நடந்துள்ளது.

    அந்தந்த ஊராட்சி செயலாளா்கள் மூலம், தோ்தல் பணியாளா்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. முதல் கட்டத்தைவிட, இரண்டாம் கட்ட தோ்தலில் கூடுதல் எண்ணிக்கையில் பதவிகளும், வேட்பாளா்களும், வாக்குச்சாவடியும் உள்ளது. இதனால் வாக்குப்பெட்டிகளை விரைவாக எடுத்து வர, மண்டல அலுவலா்கள், கூடுதல் வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா்.

     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp