பவானிசாகர் வாய்க்காலில் மூழ்கிய இளைஞர் மாயம்

பவானிசாகர் வாய்க்காலில் மூழ்கிய இலங்கை மறுவாழ்வு முகாம் இளைஞரைத் தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

பவானிசாகர் வாய்க்காலில் மூழ்கிய இலங்கை மறுவாழ்வு முகாம் இளைஞரைத் தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
பவானிசாகர் இலங்கை மறுவாழ்வு முகாமைச் சேர்ந்தவர் ஜெகதீஸ்வரன் (37), தனியார் நிறுவன ஓட்டுநர். இவருக்கு சங்கீதா என்ற மனைவியும், ஒரு மகள், மகன் உள்ளனர். இந்நிலையில், பவானிசாகர் வாய்க்காலில் திங்கள்கிழமை மாலை குளித்துக் கொண்டிருந்தபோது, நீரில் அடித்துச் செல்லப்பட்டார்.
இதுகுறித்து கிராம மக்கள் முகாமிற்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த இலங்கை மறுவாழ்வு முகாம் இளைஞர்கள் மாயமான ஜெகதீஸ்வரனைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து இரண்டாது நாளாகவும் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து ஜெகதீஸ்வரனின் பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், ஜெதீஸ்வரனின் பெற்றோர் இலங்கையில் இருப்பதால் தமிழகம் வருவதற்கு விசா கிடைக்காமல் அவதிப்பட்டுக் கொண்டிருப்பதாக முகாம் இளைஞர்கள் தெரிவித்தனர். ஜெகதீஸ்வரனின் பெற்றோர் கனகேந்திரன், பெருமாயி தமிழகம் வர அரசு உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.    
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com