வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை திறன் பயிற்சிக்கான பதிவு முகாம்
By DIN | Published On : 06th February 2019 06:43 AM | Last Updated : 06th February 2019 06:43 AM | அ+அ அ- |

ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் வேலை வாய்ப்பற்றோருக்கான உதவித் தொகை பெறும் நபர்களுக்கு அவர்கள் விரும்பும் துறையில் திறன் பயிற்சி பெறுவதற்கான பதிவு முகாம், தொழில் திறன் பயிலரங்கம் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.
இதுகுறித்து, மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட தகவல்:
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் வேலை வாய்ப்பற்றோருக்கான உதவித் தொகை பெறும் திட்டத்தின்கீழ் உதவித் தொகை பெற்று வரும் பயனாளிகளுக்கு அவர்கள் விரும்பும் துறையில் திறன் பயிற்சி அளிக்கப்படுகிறது. அதன்படி, ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பிப்ரவரி 7 ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் திறன் பயிற்சி பதிவு முகாம், தொழில் திறன் பயிலரங்கம் நடைபெறவுள்ளது.
இதில் கலந்துகொள்ளும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்குத் திறன் பயிற்சி வழங்கும் நிறுவனங்கள் வாயிலாக விரும்பும் துறையில் திறன் பயிற்சி வழங்கப்படும். எனவே, இப்பயிலரங்கில் உதவித் தொகை பெறும் வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம். மேலும், விவரங்களுக்கு 0424-2275860.