ஈரோடு எழுத்தாளர் எஸ்.ஆர்.சுப்பிரமணியனுக்கு விஜிபி விருது
By DIN | Published on : 13th February 2019 07:44 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
ஈரோட்டைச் சேர்ந்த உலகத்தமிழ் எழுத்தாளர்கள் சங்கத் துணைத் தலைவரும், பாரதி இலக்கியச் சுற்றத்தின் செயலரும், எழுத்தாளரும், சமூக சேவகருமான எஸ்.ஆர். சுப்பிரமணியன், விஜிபி உலகத் தமிழ்ச்சங்கத்தின் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சென்னை சத்யா ஸ்டுடியோவில் தலைவர் டாக்டர் வி.ஜி.சந்தோசம் தலைமையில் வரும் 16ஆம் தேதி நடைபெறவுள்ள விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் வெள்ளிவிழாவில் எஸ்.ஆர். சுப்பிரமணியனுக்கு இலக்கிய விருது அளிக்கப்படவுள்ளது.