சுடச்சுட

  

  ஈரோடு மின்பகிர்மான வட்டத்துக்கு உள்பட்ட மின் நுகர்வோருக்கான குறை கேட்பு முகாம் கோட்ட அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற உள்ளது.
  இதுகுறித்து மின்வாரிய மேற்பார்வைப் பொறியாளர் த. ராஜேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
  மின் நுகர்வோர்களின் குறைகளைக் களையும் நோக்கில்  மாதம்தோறும் இரண்டாவது வாரம் புதன்கிழமை குறை கேட்பு முகாம் நடத்தப்படுகிறது. அதனடிப்படையில், ஈரோடு மின் பகிர்மான வட்டத்துக்கு உள்பட்ட மின் நுகர்வோர்களுக்கான குறை கேட்பு முகாம்  ஈரோடு ஈவிஎன் சாலையில் உள்ள தெற்கு கோட்ட  செயற்பொறியாளர் அலுவலகத்தில் புதன்கிழமை (பிப்ரவரி 13) காலை 11 மணியளவில் நடைபெறவுள்ளது.  
  எனவே, இம்முகாமில் மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு  மின்வினியோகம் தொடர்பான தங்கள் குறைகளை நேரில் தெரிவித்துப் பயன்பெறலாம் என அதில் குறிப்பிட்டுள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai