சுடச்சுட

  

  அறச்சலூர் நவரசம் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு கருத்தரங்கம் செவ்வாய்கிழமை நடைபெற்றது. 
  கல்லூரி துணை முதல்வர் ஐ.செல்வம் வரவேற்றார். கல்லூரி முதல்வர் ப.லோகாம்பாள் தலைமை வகித்தார். கல்லூரி தலைவர் டி.கே.தாமோதரன், செயலாளர் சி.குமாரசாமி, பொருளாளர் பழனிசாமி, துணைத் தலைவர். ஆர்.கோபால் மற்றும் கல்லூரி கமிட்டி உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.
  விழாவில் ஈரோடு (கிழக்கு) வட்டாரப் போக்குவரத்து அலுவலர் வி.கண்ணன் கலந்து கொண்டு பேசுகையில், ஓட்டுநர்கள், கல்லூரி வாகனங்களை இயக்கும்போது கவனத்துடன் இயக்க வேண்டும். மாணவிகள் இருசக்கரவாகனங்களில் செல்லும்போது கட்டாயம் தலைக்கவசம் அணியவேண்டும் என்றார். மோட்டார் வாகன ஆய்வாளர் ஈரோடு (கிழக்கு) பி.சதாசிவம் கலந்துகொண்டு சாலைபாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்தும், சாலைவிதிகளை மதித்து வாகனங்களை இயக்கவேண்டும் என்று கூறினார்.  இதையடுத்து பள்ளி மற்றும் கல்லூரி ஓட்டுநர்களுக்கும், மாணவியருக்கும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டறிக்கை வழங்கப்பட்டது. வணிக மேலாண்மைத் துறை தலைவர் வே.சுகுமார் நன்றி கூறினார். 
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai