சுடச்சுட

  

  அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.16.91 லட்சத்துக்கு வேளாண்மை விளைபொருள்கள் ஏலம் திங்கள்கிழமை நடைபெற்றது. 
  இங்கு 14,917 தேங்காய்கள் விற்பனைக்கு வந்ததில் சிறியவை ரூ.4.30 முதலும், பெரியவை ரூ.15 வரையும் ரூ.1,53,258க்கு விற்பனையானது. 62 மூட்டைகள் தேங்காய் பருப்பு கிலோ ரூ.88.88 முதல் ரூ.106.89 வரையில் ரூ.1,67,102க்கும், ஒரு மூட்டை எள் கிலோ ரூ.12.69 என ரூ.7,059க்கும், 56 மூட்டைகள் மக்காச்சோளம், கிலோ ரூ.20.69 முதல் ரூ.21.13 வரையில் ரூ.1,07,463க்கும், 194 மூட்டைகள் துவரை கிலோ ரூ.47.29 முதல் ரூ.55.90 வரையில் ரூ.11,00,000க்கும் ஏலம் போனது. 
  நரிப்பயிர் கிலோ ரூ.41.19 முதல் ரூ.66 வரையில் ரூ.1,50,000க்கும், கொள்ளு, கிலோ ரூ.27.67 முதல் ரூ.31.69 வரையில் ரூ.2,987க்கும், தட்டைப்பயிர் கிலோ ரூ.29.69 முதல் ரூ.62.19 வரையில் ரூ.2,004க்கும், ஒரு மூட்டை ஆமணக்கு கிலோ ரூ.47.29 என ரூ.1,277க்கும் விலை போனது. மொத்தம் 374.80 குவிண்டால் வேளாண் விளைபொருள்கள் ரூ.16 லட்சத்து 91 ஆயிரத்து 350க்கு 
  விற்பனையானது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai