அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆலோசனைக் கூட்டம்
By DIN | Published On : 20th February 2019 07:39 AM | Last Updated : 20th February 2019 07:39 AM | அ+அ அ- |

ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 2 மற்றும் எஸ்எஸ்எல்சி தேர்வுகள் தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் ஈரோடு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடந்தது.
கூட்டத்துக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளி தலைமை வகித்தார்.
கூட்டத்தில், தேர்வுகளில் எந்த முறைகேடுகளும் நடைபெறாதவாறு ஆசிரியர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
இதில் மாவட்ட கல்வி அலுவலர்கள் முத்துகிருஷ்ணன், ராமன், சிவகுமார், ரேணுகாதேவி, தேவேந்திரன், 236 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக, தலைமை ஆசிரியர்களுக்கான கையேடு வெளியிடப்பட்டது. இந்தக் கையேட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளி வெளியிட்டார்.