சுடச்சுட

  

  ஈரோடு கோட்டை கோயில்களில் 44 சிசிடிவி கேமராக்கள் பொருத்தம்

  By DIN  |   Published on : 22nd February 2019 07:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஈரோடு கோட்டைப் பகுதியில் உள்ள கோயில்களில் 44 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
    ஈரோடு மாவட்டத்தில் நகைப் பறிப்பு, வழிப்பறி உள்ளிட்ட குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையில் வணிக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த மாவட்ட காவல் துறை அறிவுறுத்தியுள்ளது. வழிபாட்டு தலங்களில் குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் வகையில் சிசிடிவி மேகராக்களை பொருத்த அந்த நிர்வாகங்களுக்கு ஈரோடு எஸ்.பி. சக்தி கணேசன் அறிவுறுத்தியிருந்தார்.
  இதன்பேரில், ஈரோடு கோட்டைப் பகுதியில் உள்ள ஆருத்ர கபாலீஸ்வரர் கோயில், கஸ்தூரி அரங்கநாதர் கோயில், திருவெங்கடசாமி வீதியில் உள்ள மகிமாலீஸ்வரர் கோயில், தெப்பக்குளம் பகுதி கோயில் சுற்றுவட்டாரப் பகுதிகளை கண்காணிக்கும் வகையில் 38 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.  இதில், கஸ்தூரி அரங்கநாதர் கோயிலில் கூடுலாக 6 கேமராக்களை பொருத்தும் பணி கோயில் நிர்வாகம் சார்பில் நடைபெற்று வருகிறது.
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai