முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு
நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
By DIN | Published On : 28th February 2019 08:25 AM | Last Updated : 28th February 2019 08:25 AM | அ+அ அ- |

ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (மார்ச்1) நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாதம்தோறும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது.
அதன்படி வரும் மார்ச் 1ஆம் தேதி காலை 10 மணிக்கு ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இதில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் பங்கேற்று தங்களுக்கு தேவையான எழுதப்படிக்கத் தெரிந்த நபர்கள் முதல், பட்டப்படிப்பு படித்த நபர்கள் வரை மற்றும் தையலர், கணினி இயக்குபவர், தட்டச்சர், ஓட்டுநர்கள் போன்ற பணிகளுக்கு நபர்களை தேர்வு செய்து வேலை அளிக்க உள்ளனர்.
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை மூலம் நடத்தப்படும் இந்த வேலைவாய்ப்பு முகாம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு தனியார் துறையில் பணியமர்த்தப்படும் நபர்களின் பதிவு எண் ரத்தாகாது.
மேலும் விவரங்களுக்கு, ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலத்தில் நேரிலோ அல்லது 0424-2275860 தொலைபேசி எண்ணிலோ மற்றும் erodejopfair@gmail.com இணையதளம் வாயிலாகவோ தெரிந்து கொள்ளலாம்.