முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு
பி.பெ.அக்ரஹாரம் மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா
By DIN | Published On : 28th February 2019 07:45 AM | Last Updated : 28th February 2019 07:45 AM | அ+அ அ- |

ஈரோடு பி.பெ.அக்ரஹாரம் மாரியம்மன் கோயிலில் குண்டம் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
ஈரோடு பி.பெ. அக்ரஹாரத்தில் மாரியம்மன், காளியம்மன் கோயில் குண்டம் திருவிழா கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து 25ஆம் தேதி பொங்கல் வைத்தலும், மாவிளக்கு நிகழ்ச்சியும் நடைபெற்றன.
விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. குண்டம் பூஜை, வாஸ்து பூஜை, திருஷ்டி கழித்தல் செய்த பின்பு முதலில் கோயில் பூசாரிகள் குண்டம் இறங்கினர்.
அவர்களைத் தொடர்ந்து 300-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், குழந்தைகள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.
மேலும் பக்தர்கள் பலர் அலகு குத்தியும், அக்னி சட்டி ஏந்தியும், தீர்த்தக் குடம் எடுத்து ஊர்வலமாக வந்தும் அம்மனை வழிபட்டனர். வியாழக்கிழமை கம்பம் பிடுங்குதலும், மஞ்சள் நீராட்டும், இரவு, அன்னதானமும் நடைபெற உள்ளது. வெள்ளிக்கிழமை இரவு மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது.