முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு
மாணவர்களுக்கான சீருடை மாற்றம் அரசின் கொள்கை முடிவு
By DIN | Published On : 28th February 2019 07:49 AM | Last Updated : 28th February 2019 07:49 AM | அ+அ அ- |

பள்ளி மாணவர்களுக்கான சீருடை மாற்றம் என்பது அரசின் கொள்கை முடிவு என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் ஈரோடு பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியை புதன்கிழமை திறந்துவைத்த அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
தமிழக அரசு பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. இதனை மக்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக இந்தக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உரிய ஆவணங்களை அளித்துள்ள அனைத்து மாணவர்களுக்கும் அரசின் கல்வி உதவித் தொகை ரூ. 6,500 வழங்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கான சீருடை மாற்றம் என்பது அரசின் கொள்கை முடிவு. தேவை எனக் கருதினால் மாற்றம் குறித்து அரசு ஆலோசித்து அறிவிக்கும். பிளஸ் 2 பொதுத்தேர்வு வரும் மார்ச் 1 ஆம் தேதி தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து பிளஸ்1 மற்றும் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வுகள் தொடங்குகின்றன. மாணவர்கள் அச்சமில்லாமல் தேர்வு எழுத வேண்டும் என்றார்.
நிகழ்வில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன், மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன், எம்எல்ஏக்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு, வி.பி.சிவசுப்ரமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.