முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு
மாநில அளவிலான ஜிம்னாஸ்டிக் போட்டி: அரசுப் பள்ளி மாணவியர் சிறப்பிடம்
By DIN | Published On : 28th February 2019 07:48 AM | Last Updated : 28th February 2019 07:48 AM | அ+அ அ- |

மாநில அளவிலான ஜிம்னாஸ்டிக் போட்டியில் அரசுப் பள்ளி மாணவிகள் சிறப்பிடம் பெற்றனர்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதல்வர் கோப்பைக்கான மாநில அளவிலான ஜிம்னாஸ்டிக் போட்டிகள் அண்மையில் சென்னையில் நடைபெற்றன.
தமிழகம் முழுவதிலிருந்து மாவட்ட போட்டிகளில் முதலிடம் பிடித்த மாணவ, மாணவியர் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இதில், ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம், கரட்டுப்பாளையத்தில் இயங்கிவரும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்(எஸ்டிஏடி) சிறப்பு ஜிம்னாஸ்டிக் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வரும் கோபி கலைக் கல்லூரி மாணவர் கதிரீஸ்வரன் ஹரிசாண்டல் பார் பிரிவில் இரண்டாமிடம் பிடித்தார்.
அதேபோல் பெண்களுக்கான ப்ளோர் எக்ஸசைஸ் போட்டியில் கரட்டுப்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளி 10 ஆம் வகுப்பு மாணவி கிருத்திகா இரண்டாமிடமும், அன் ஈவன் பார் போட்டியில் அதே பள்ளியை சேர்ந்த 9 ஆம் வகுப்பு மாணவி ஈஸ்வரி இரண்டாமிடமும், பேலன்சிங் பீம் போட்டியில், கோபி காசிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 மாணவி மதுபாலா மூன்றாமிடமும் பெற்றனர்.
போட்டிகளில் மொத்தம் நான்கு பரிசுகளை பெற்ற மாணவர் மற்றும் மாணவிகள், ரூ. 2.75 லட்சம் பரிசு பெற்றனர்.
பரிசு பெற்ற மாணவ, மாணவியருக்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் ஜெயச்சந்திரன், பயிற்சியாளர் தனபாக்கியம் உள்ளிட்டோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.