Enable Javscript for better performance
முதல்வர் வருகை: ஈரோடு மாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு

    முதல்வர் வருகை: ஈரோடு மாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்

    By DIN  |   Published On : 28th February 2019 07:46 AM  |   Last Updated : 28th February 2019 07:46 AM  |  அ+அ அ-  |  

    புதிய மேம்பாலம் திறப்பு உள்ளிட்ட பல்வேறு விழாக்களில் பங்கேற்க முதல்வர் வியாழக்கிழமை மாலை ஈரோடு வருவதால் மாநகர பகுதிகளில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 
    இதுகுறித்து ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.சக்தி கணேசன்    வெளியிட்ட செய்திக் குறிப்பு: 
    முதல்வர் வருகையையொட்டி வியாழக்கிழமை காலை முதல் இரவு வரை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி பன்னீர்செல்வம் பூங்கா முதல் சவிதா மருத்துவமனை வரை இருபுறமும் வாகனங்கள் சென்றுவர அனுமதி இல்லை.  
    மேட்டூர் ரோடு, பெருந்துறை ரோடு, ஈ.வி.என் சாலையில் இருந்து பிரப் சாலை வழியாக பன்னீர்செல்வம் பூங்கா செல்லும் வாகனங்கள் சூரம்பட்டி நால் ரோடு வழியாக எஸ்.கே.சி. சாலை மூலம் காந்திஜி சாலையை அடைந்து பன்னீர்செல்வம் பூங்கா செல்ல வேண்டும்.
    பன்னீர்செல்வம் பூங்காவிலிருந்து அரசு மருத்துவமனை ரவுண்டானா வரும் வாகனங்கள் இந்த சாலை வழியாக செல்லலாம். மேலும் கனி சந்தை,  மணிக்கூண்டு, சத்தி சாலை, நாச்சியப்பா சாலை வழியாகவும் அரசு மருத்துவமனை ரவுண்டானா செல்லலாம். அரசு மருத்துவமனை ரவுண்டானாவில் இருந்து நேராக வாசுகி சாலையில் சென்று இடதுபுறம் திரும்பி பேருந்து நிலையத்துக்கு செல்லலாம். பன்னீர்செல்வம் பூங்காவில் இருந்து அரசு மருத்துவமனைக்கு இடையில் உள்ள செங்குந்தர் பள்ளி, கலைமகள் பள்ளிக்கு அரசு மருத்துவமனையில் இருந்து செல்லலாம்.
    சிஎஸ்ஐ பள்ளிக்கு பன்னீர்செல்வம் பூங்காவில் இருந்து பிரப் சாலை வழியாக  செல்லலாம்.  பேருந்து நிலையத்திலிருந்து நாச்சியப்பா சாலை வழியாக பன்னீர்செல்வம் பூங்கா வழியாக செல்லும் பேருந்துகள் சத்தி சாலை, மஜீத் சாலை,  காவேரி சாலை, ஆர்.கே.வி. சாலை, எஸ்.பி.ஐ. சந்திப்பு அல்லது மரப்பாலம் வழியாக பன்னீர்செல்வம் பூங்கா வந்து செல்லலாம்.
    ஸ்வஸ்திக் சந்திப்பிலிருந்து ஈவிஎன் சாலை மற்றும் சென்னிமலை சாலை சந்திப்பில் இருந்தும் பெருந்துறை சாலை திண்டல் சந்திப்பிலிருந்தும் அரசு மருத்துவமனை ரவுண்டானாவுக்கு கனரக, சரக்கு வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. காளைமாடு சிலையிலிருந்து பன்னீர்செல்வம் பூங்காவுக்கு கனரக, சரக்கு வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை.
    தேசிய நெடுஞ்சாலை சந்திப்பில் இருந்து பெருந்துறை, ஈரோட்டுக்கு வரும் கனரக வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலையில் நசியனூர் புறவழிச்சாலை வழியாக சித்தோடு 4 ரோடு சந்திப்பு மற்றும் சத்தியமங்கலம் சாலை வழியாக வரலாம்.  காளைமாடு சிலையில் இருந்து வரும் வாகனங்கள் சென்னிமலை சாலை சுற்றுவட்டச்சாலை சந்திப்பு வழியாக சென்று பவளத்தான்பாளையம் சந்திப்பில் இருந்து மேட்டுக்கடை சந்திப்புக்கு சென்று வலதுபுறம் அல்லது நேராக செல்லலாம்.  
    பெருந்துறை காவல் நிலைய சந்திப்பு,மேட்டுக்கடை சந்திப்பு, திண்டல் சந்திப்பில் இருந்து கனரக, சரக்கு வாகனங்கள் பெருந்துறை சாலை வழியாக செல்ல அனுமதி இல்லை. நசியனார் சாலை வழியாக சென்று வில்லரசம்பட்டி சந்திப்பு சென்று அங்கிருந்து சத்தியமங்கவம் சாலை வரலாம். காவேரி பாலத்தில் இருந்து வரும் கனரக சரக்கு வாகனங்கள் காவிரி சாலை,  ஆர்.கே.வி.சாலை, மணிக்கூண்டு, மரப்பாலம் வழியாக காளைமாடு சிலை வரலாம்.
     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp