பி.எஸ்.என்.எல். நிறுவனம் மூலம் இலவச திறன் மேம்பாட்டுப் பயிற்சி

பி.எஸ்.என்.எல். நிறுவனம் மூலம் அளிக்கப்படும் இலவச தொழில்நுட்பத் திறன் மேம்பாட்டுப் பயிற்சியில் தகுதியுள்ளவர்கள் சேர்ந்து பயன்பெறலாம்.

பி.எஸ்.என்.எல். நிறுவனம் மூலம் அளிக்கப்படும் இலவச தொழில்நுட்பத் திறன் மேம்பாட்டுப் பயிற்சியில் தகுதியுள்ளவர்கள் சேர்ந்து பயன்பெறலாம்.
இதுகுறித்து, ஈரோடு பி.எஸ்.என்.எல். நிறுவனம் வெளியிட்ட தகவல்:
ஈரோடு பி.எஸ்.என்.எல். முதன்மைப் பொது மேலாளர் அலுவலகம் சார்பில், தமிழ்நாடு திறன் வளர்ப்புக் கழகத்துடன் இணைந்து வேலை தேடும் இளைஞர்களுக்கான இலவச தொழில்நுட்பத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, பிராட்பேண்ட் டெக்னீஷியன் - 6 வாரப் பயிற்சி, இன்ப்ரா என்ஜினியர் - 6 வாரப் பயிற்சி, இன்பர்மேஷன் அன்ட் கம்யூனிகேஷன் என்ஜினியரிங் - 7 வாரப் பயிற்சி, நெட் வொர்க் என்ஜினியர் - 6  வாரப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
முற்றிலும் இலவசமாக அளிக்கப்படும் இப்பயிற்சியில் டிப்ளமோ படித்த 18 முதல் 40 வயதுக்கு உள்பட்டவர்கள் பயிற்சி பெறலாம். பயிற்சிக் காலத்தில், வேலை நாள்களுக்கு 100 ரூபாய் வீதம் போக்குவரத்துக் கட்டணம் வழங்கப்படும்.
தமிழகத்தில் சென்னை, அனைத்து மாவட்டங்களிலும் இப்பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சிக்குப் பின், சிறந்த தனியார் நிறுவனங்கள் மூலம் வளாக நேர்காணல் நடத்த முயற்சி மேற்கொள்ளப்படும். கூடுதல் விவரங்களுக்கு, ‌r‌g‌m‌t‌t​c.​b‌s‌n‌l.​c‌o.‌i‌n/‌j‌o​b‌p‌o‌r‌t​a‌l, ‌w‌w‌w.‌r‌g‌m‌t‌t​c.​b‌s‌n‌l.​c‌o.‌i‌n என்ற இணையதள முகவரியிலும், 0424-2222245, 94861-01749 என்ற தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com