Enable Javscript for better performance
காவல் முன் நடத்தை சரிபார்ப்புப் பணிகள்: இணையவழி சேவையை பயன்படுத்தும் வசதி அறிமுகம்- Dinamani

சுடச்சுட

    

    காவல் முன் நடத்தை சரிபார்ப்புப் பணிகள்: இணையவழி சேவையை பயன்படுத்தும் வசதி அறிமுகம்

    By DIN  |   Published on : 08th January 2019 01:37 AM  |   அ+அ அ-   |    |  

    காவல் முன் நடத்தை சரிபார்ப்புப் பணிகள் தொடர்பாக, காவல் துறை அறிமுகம் செய்துள்ள புதிய இணைய வழி சேவையை பொதுமக்கள் பயன்படுத்தலாம்.
    இதுகுறித்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் வெளியிட்ட தகவல்:
    காவல் முன் நடத்தை சரிபார்ப்புக்காக பொதுமக்கள், தனியார் நிறுவனங்கள் W​W​W.‌e‌s‌e‌r‌v‌i​c‌e‌s.‌t‌n‌p‌o‌l‌i​c‌e.‌g‌o‌v.‌i‌n என்ற இணையதளத்தில்  பின்வரும் சேவைகளுக்காக விண்ணப்பிக்கலாம்.
    தனிநபர் விவரம் சரிபார்த்தல்,  வேலை நிமித்தமாக சரிபார்த்தல், வாடகைதாரரின் விவரம் சரிபார்த்தல், வீட்டு வேலையாள்கள் விவரம் சரிபார்த்தல் போன்ற  சேவைகளைப் பயன்படுத்த விண்ணப்பிக்கும் தனிநபர் ரூ. 500, தனியார் நிறுவனங்கள் ரூ. 1,000 கட்டணம் செலுத்த வேண்டும். இணையதளம் வழியாக கிரெடிட் கார்டு/டெபிட் கார்டு, இணைய வழி வங்கி சேவை ஆகிய முறைகளில் இக்கட்டணத்தை செலுத்தலாம்.
    காவல் முன் நடத்தை சரிபார்ப்பு சேவையின் முக்கிய நோக்கம் என்னவெனில், விவரம் சரிபார்க்கப்பட வேண்டிய தனிநபர் ஒருவரின் தற்போதைய வீட்டு முகவரி, காவல் துறையின் வசம் உள்ள ஆவணங்களின் அடிப்படையில் அந்த  நபர் ஏதேனும் குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளரா என்ற விவரம் சரிபார்க்கப்படும். தமிழகத்தில் வசிப்பவர்கள் குறித்த விவரங்கள் மட்டும் இச்சேவையின் மூலம் சரிபார்க்கப்படும். விண்ணப்பித்த 15 நாள்களுக்குள் காவல் முன் நடத்தை சரிபார்ப்புப் பணி முடிக்கப்படும். 
    காவல் முன் நடத்தை சரிபார்ப்பு சேவைக்காக பொதுமக்கள் அல்லது தனியார் நிறுவனங்கள் காவல் நிலையத்துக்கு நேரடியாகச் செல்ல வேண்டிய அவசியமில்லை. பொதுமக்கள் / தனியார் நிறுவனங்கள் காவல் சரிபார்ப்பு அறிக்கை பெறுவதற்காக இணையதளம் வழியாக விண்ணப்பித்து அதற்கான அறிக்கையை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், அந்த அறிக்கையின் நகல் விண்ணப்பதாரரின் மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பி வைக்கப்படும். காவல் சரிபார்ப்பு அறிக்கையில் உள்ள QR C‌o‌d‌e ஸ்கேன் செய்தும், அல்லது காவல் சரிபார்ப்பு சேவையிலுள்ள "சரிபார்ப்பு' (V‌e‌r‌i‌f‌y) என்ற பகுதியின் மூலம் இதன் நம்பகத்தன்மையை P​V​R எண்ணைப் பயன்படுத்தி இணையதளம் வழியாக விண்ணப்பத்தின் நிலை குறித்தும் அறிந்துகொள்ளலாம். 
    இச்சேவை தொடர்பாக எழும் வினாக்கள், அதற்கான விளக்கங்கள் தமிழ், ஆங்கிலத்தில் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 
    இச்சேவையில் ஏதேனும் குறைகள் இருந்தால் அதுபற்றி காவல் முன் நடத்தை சரிபார்ப்பு சேவையில் பின்னூட்டம்  (F‌e‌e‌d​b​a​c‌k)  என்ற பகுதியில் இணையதளம் வழியாக புகார் அளிக்கலாம்.
    மேற்படி பின்னூட்டமானது சம்பந்தப்பட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் / மாநகர ஆணையர், சென்னை மாநகர D​C-​II, IS  ஆகியோரின் மின்னஞ்சல் முகவரிக்கு தானியங்கி முறையில் உரிய நடவடிக்கைக்காக அனுப்பப்படும். 
    விண்ணப்பத்தில் அளிக்கப்படும் விவரங்கள், ஆவணங்களில் குறைகள் இருந்தால்  விண்ணப்பம் நிராகரிக்கப்படும். அதற்காக செலுத்தப்பட்ட கட்டணத் தொகையும் திருப்பி அளிக்கப்படமாட்டாது. மேலும், காவல் துறைக்கு தவறான விவரங்கள் அளிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    flipboard facebook twitter whatsapp