அவசர கால ஊர்திக்கு சிறப்பு விரைவு வழி திட்டம்: பொதுமக்கள் வரவேற்பு

ஈரோடு மாவட்ட காவல் துறையால்  நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அவசர கால ஊர்திக்கான சிறப்பு விரைவு வழி திட்டம்

ஈரோடு மாவட்ட காவல் துறையால்  நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அவசர கால ஊர்திக்கான சிறப்பு விரைவு வழி திட்டம் மூலம்  குறைந்த நேரத்தில் மருத்துவமனைகளுக்குச் செல்லும் வசதி ஏற்பட்டுள்ளதால் 108  நிர்வாகமும், பொதுமக்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் விபத்து, மகப்பேறு, உடல் நலம் குன்றிய பாதிக்கப்பட்ட நபர்களை விரைவாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் அவசர கால ஊர்திகளுக்கு (108 ஆம்புலன்ஸ்) வழிவிடும் பொருட்டு சைரன் ஒலி கேட்டவுடன் சாலையில் செல்லும் பாதசாரிகள், அனைத்து ரக வாகன ஓட்டிகள் சாலையின் இடதுபுறமாக ஒதுங்கி பாதிக்கப்பட்ட நபர்களின் உயிர்காக்கும் வகையில் வழிவிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதுதொடர்பாக, 108-E‌x‌p‌r‌e‌s‌s c‌o ‌o‌r‌d‌i‌n​a‌t‌o‌r G‌u‌ W‌ha‌t'‌s a‌p‌p  குழுமம் ஏற்படுத்தப்பட்டு, அதில் மாவட்ட கண்காணிப்பாளர், அனைத்து காவல் அதிகாரிகள், 108-A‌m​b‌u‌l​a‌n​c‌e C‌oo‌r‌d‌i‌n​a‌t‌o‌r,, மருத்துவ அலுவலர்கள் கொண்ட குழு ஆரம்பிக்கப்பட்டது. விபத்து குறித்து 108 ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டு அறையில் இருந்து செய்தி வந்தவுடன், அவசரகால ஊர்தி  விபத்து நடந்த பகுதிக்குச் சென்று பாதிக்கப்பட்ட நபர்களைத் தாமதமின்றி  மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வசதியாக E​X​P​R​E​SS FR​EE WAY என்ற அதிவேக விரைவு வழி டிசம்பர் 22 ஆம் தேதி தொடங்கப்பட்டது.
இதுகுறித்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசன் கூறியதாவது:
ஈரோடு மாவட்டத்தில் அவசரகால ஊர்திகள் விரைவாக மருத்துவமனைக்குச் செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேற்கண்ட நடவடிக்கையின் காரணமாக 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் விபத்தில் பாதிக்கப்பட்ட நபர்களுடன் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் நேரத்தை சென்ற ஆண்டின் (2018) நவம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு ஆண்டில்  இத்திட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு, ஈரோடு நகர்ப் பகுதிகளில் 12.35 நிமிடங்களிலிருந்து 9.56 நிமிடங்களும், மருத்துவமனைக்குச் செல்லக்கூடிய  நேரம் 2.39 நிமிடங்களும் குறைந்துள்ளது. அதேபோல, ஊரக பகுதிகளில் 15.18 நிமிடங்களிலிருந்து 13.23 நிமிடங்களும், மருத்துமனைக்குச் செல்லக்கூடிய  நேரம் 1.95 நிமிடங்களும் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், விபத்தில் பாதிக்கப்பட்ட நபர்களை கோல்டன் ஹவர் என்ற  நேரத்துக்குள் விரைந்து சென்று மருத்துவமனையில் சேர்க்க  மிகவும் உதவிகரகமாக இருப்பதாக 108 நிர்வாகத்தினர், பொதுமக்கள் இத்திட்டத்தை  வரவேற்றுள்ளதாகக் குறிப்பிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com