சுடச்சுட

  

  ஈரோடு பூம்புகார் நிலையத்தில் கைவினைப் பொருள்கள் விற்பனைக் கண்காட்சி

  By DIN  |   Published on : 13th January 2019 03:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  ஈரோடு, மேட்டூர் சாலையில் உள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தில் சனிக்கிழமை முதல் ஜனவரி 25 ஆம் தேதி வரை அனைத்து கைவினைப் பொருள்கள் கண்காட்சி விற்பனை தொடங்கியுள்ளது.
  தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம், கைவினைஞர்களின் பொருள்களுக்கு சந்தை வாய்ப்பை உருவாக்கும் நோக்கில் பலவகை கண்காட்சிகளை நடத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, ஈரோடு பூம்புகார் விற்பனை நிலையத்தில் ஜனவரி 11 முதல் 25 ஆம் தேதி வரை அனைத்து கைவினைப் பொருள்கள் கண்காட்சி, விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. 
  இதுகுறித்து, மாவட்ட மேலாளர் ஜி.சரவணன் கூறியதாவது:
  இக்கண்காட்சியில், ஐம்பொன் சிற்பங்கள், பித்தளை விளக்குகள், தஞ்சை ஓவியங்கள், சந்தன மரப் பொருள்கள், ரோஸ் மரச்சிற்பங்கள், ஜெய்பூர் நவரத்தினக் கற்கள், முத்து நகைகள், ராசிக்கற்கள், ஐம்பொன் வளையல்கள், கொலுசுகள், அமெரிக்கன் டைமண்ட் நகைகள், பவள மாலைகள், குந்தன் கல் மாலைகள், மொரதாபாத் கலைப் பொருள்கள், ஜெய்ப்பூர் வண்ண ஓவியங்கள், ஆயில் பெயிண்டிங், தோல் பொருள்கள், வலம்புரி சங்குப் பொருள்கள், அகர்பத்திகள், வாசனை திரவியங்கள், ரோஸ் மரத்தில் பதிக்கப்பட்ட சுவர் அலங்கார பேனல்கள், சகரன்பூர் மரத்தில் செய்யப்பட்ட மசாஜ் பொருள்கள், அலாய் மெட்டல், வெள்ளை உலோகத்தால் செய்யப்பட்ட கைவினைப் பொருள்கள், காகிதக் கூழால் செய்யப்பட்ட பொம்மைகள், மாக்கல் விநாயகர், சந்தனக் கட்டைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
  குறைந்தபட்சம் ரூ. 50 முதல் ரூ. 1 லட்சம் வரையிலான கைவினைப் பொருள்கள் வைக்கப்பட்டுள்ளன. கடன் அட்டைகளுக்கு எவ்வித சேவைக் கட்டணமும் இல்லாமல் ஏற்றுக் கொள்ளப்படும். அனைத்து கலைப் பொருள்களுக்கும் 10% சிறப்புத் தள்ளுபடி அளிக்கப்படுகிறது என்றார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai