சுடச்சுட

  

  பாரியூர் கொண்டத்துக் காளியம்மன் கோயில் தேர்த் திருவிழா

  By DIN  |   Published on : 13th January 2019 03:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  கோபிசெட்டிபாளையத்தில் பிரசித்தி பெற்ற பாரியூர் கொண்டத்துக் காளியம்மன் கோயில் குண்டம், தேர்த் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
  விழாவில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன், திருப்பூர் மக்களவை உறுப்பினர் சத்யபாமா ஆகியோர் தேரை வடம்பிடித்து இழுத்து தொடக்கிவைத்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில், அதிமுக ஒன்றியச் செயலாளர் நம்பியூர் தம்பி சுப்பிரமணியம், ஆவின் பால் தலைவர் கே.கே.காளியப்பன், கோபி முன்னாள் நகர்மன்றத் தலைவர் கே.கே.கந்தவேல் முருகன், தொழிலதிபர்கள் ஆட்டோ பார்ட்ஸ் துரை, பாரதி வித்யாலயா பள்ளி நிறுவனர் வேலுமணி, குருகுலம் பள்ளி முதல்வர் கே.ஆர்.ரங்கராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai