ஈரோட்டில் பல்வேறு கல்வி நிலையங்களில் பொங்கல் விழா

ஈரோட்டில் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களில் பொங்கல் விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.


ஈரோட்டில் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களில் பொங்கல் விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
கொங்கு கலை அறிவியல் கல்லூரியில், தமிழ்த் துறை சார்பில், பல்வேறு துறை சார்ந்த மாணவர்களிடையே பொங்கல் வைக்கும் போட்டி நடைபெற்றது. மாணவ, மாணவிகள் பாரம்பரிய உடையணிந்து, இயற்கைப் பொருள்களை மட்டுமே பயன்படுத்தி பொங்கல் வைத்தனர். பிறகு, மாணவர்களின் கிராமிய கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், கல்லூரித் தாளாளர் இளங்கோ, முதல்வர் ராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஈரோடு, திண்டலில் உள்ள வேளாளர் மகளிர் கலை, அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு, வேளாளர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் எஸ்.டி.சந்திரசேகர் தலைமை வகித்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். மாணவிகள் விநாயகர் கோயில் முன்பு பொங்கல் வைத்தனர்.
இதில், கல்லூரி இணைச் செயலாளர் செ.நல்லசாமி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொருளாளர் கே.கே.சி.பாலு, முதல்வர் என்.மரகதம், பேராசிரியர்கள், மாணவிகள் கலந்துகொண்டனர்.
சித்தோடு ஸ்ரீ அம்மன் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவை, தாளாளர் டி.ஜெயலட்சுமி தொடக்கிவைத்தார். திரைப்பட நடிகர் பில்லி முரளி மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார். தொடர்ந்து, கல்லூரி முதல்வர் ராஜேஸ் தலைமையில் பேராசிரியர்கள் வழிநடத்த 28 துறைகள் சார்பில் தனித்தனியாக பொங்கல் வைக்கப்பட்டது. மாணவ, மாணவிகள் அனைவரும் பாரம்பரிய உடையான வேட்டி, சேலை அணிந்திருந்தனர். 
பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவை, கல்லூரித் தாளாளர் ஏ.வெங்கடாசலம், முதல்வர் குப்புசுவாமி ஆகியோர் பொங்கல் விழாவைத் தொடக்கி வைத்தனர். ஒவ்வொரு துறையைச் சேர்ந்த மாணவ, மாணவிகளும் பொங்கல் வைத்து வழிபட்டனர். மாணவ, மாணவிகள், பேராசிரியர்களுக்கு என தனித்தனியாக பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. ஓவியம், கட்டுரைப் போட்டிகளும் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. 
ஈரோடு, திண்டல் வேளாளர் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவில், கல்லூரி முதல்வர் ஜெயராமன் தலைமையில், மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்தனர். கரும்பு, தோரணங்களால் கல்லூரி வளாகம் அலங்கரிக்கப்பட்டிருந்தது. கல்லூரியின் புல முதல்வர்கள், பேராசிரியர்கள், அனைத்துத் துறை மாணவ, மாணவிகள் உள்பட அனைவருக்கும் சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com