சுற்றுச்சூழலுக்கு பாதிப்பின்றி போகி கொண்டாட வேண்டும்: அமைச்சர் கே.சி.கருப்பணன்

பொங்கல் பண்டிகைக்கு முன்பாகக் கொண்டாடப்படும் போகி பண்டிகையின்போது, பழைய பொருள்கள், டயர்கள், சுற்றுச்சூழலுக்கு கேடு ஏற்படுத்தும் பொருள்களை


பொங்கல் பண்டிகைக்கு முன்பாகக் கொண்டாடப்படும் போகி பண்டிகையின்போது, பழைய பொருள்கள், டயர்கள், சுற்றுச்சூழலுக்கு கேடு ஏற்படுத்தும் பொருள்களை தீயிட்டு எரிக்காமல் பொதுமக்கள் கொண்டாட வேண்டும் என சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறியுள்ளார். 
பவானியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சனிக்கிழமை பங்கேற்ற அமைச்சர் கே.சி.கருப்பணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் உற்சாகமாகக் கொண்டாடும் வகையில் பொங்கல் பொருள்களுடன் பரிசுத் தொகை ரூ. 1,000 வழங்கப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்கு முன்வரும் போகி பண்டிகை பழையன கழிதலும், புதியன புகுதலும் எனும் அடிப்படையில் கொண்டாடப்படுகிறது. இந்நாளில், பொதுமக்கள் வீடுகளில் பயன்படுத்த முடியாத பழைய பொருள்கள், டயர்கள் உள்ளிட்ட பொருள்களை தெருக்களில் போட்டு தீயிட்டு எரிப்பதைத் தவிர்க்க வேண்டும். இதனால், காற்று மாசடைவதோடு, சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது. கிராமப் பகுதிகளைக் காட்டிலும், சென்னை போன்ற நகரப் பகுதிகளில் அதிக அளவில் பொருள்கள் எரிக்கப்படுகின்றன. 
இதைத் தடுக்கும் வகையிலும், பொதுமக்கள் மத்தியில் போகியை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாமல் கொண்டாடவும், விழிப்புணர்வு ஏற்படுத்த நடமாடும் வாகனங்கள் மூலம் தொடர்ந்து விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகிறது. மேலும், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், காவல் துறை இணைந்து தெருக்களில் பழைய பொருள்களைக் குவித்து வைத்து எரிப்பதைத் தடுக்கும் வகையில் விழிப்புணர்வு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com