பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்குப் பரிசளிப்பு

ஈரோடு மாவட்ட பத்திரிகையாளர்கள் நலச் சங்கம் சார்பில், அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்குப் பரிசளிப்


ஈரோடு மாவட்ட பத்திரிகையாளர்கள் நலச் சங்கம் சார்பில், அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்குப் பரிசளிப்பு, மூத்த பத்திரிகையாளர்களுக்குப் பாராட்டு, குடும்பப் பொங்கல் ஆகிய முப்பெரும் விழா சனிக்கிழமை நடைபெற்றன.
ஈரோடு இந்திய மருத்துவச் சங்க அரங்கில் நடைபெற்ற விழாவை, ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் குத்துவிளக்கேற்றி தொடக்கிவைத்தார். தமிழக வணிக வரி, பதிவுத் துறை முதன்மைச் செயலாளரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான கா.பாலசந்திரன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று உரையாற்றினார்.
விழாவில், ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை உறுப்பினர் கே.எஸ்.தென்னரசு, பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினர் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம், மாருதி மெடிக்கல் சென்டர் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் டாக்டர் சதாசிவம், கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை டாக்டர் எம்.வி.மோகன், பவானி அரசு மருத்துவர் கண்ணுசாமி, மாநகராட்சி ஆணையர் மு.சீனிஅஜ்மல்கான், மஞ்சள் வணிகர்கள் சங்க நிர்வாகி ராஜமாணிக்கம் உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்தினர்.
இதையொட்டி, அரசு பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற பத்திரிகையாளர்களின் குழந்தைகள் 17 பேருக்கு ரூ. 1.50 லட்சத்தில் ரொக்கப் பரிசுகளும், மூத்த பத்திரிகையாளர்கள் 2 பேருக்கு நினைவுப் பரிசுகளும் அளிக்கப்பட்டன. இதில், சங்க உறுப்பினர்கள் 110 பேர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, சங்க நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், விழாக் குழுவினர் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com