மிரட்டல்களைக் கண்டித்து கிராம நிர்வாக அலுவலர்கள் தர்னா

பொதுமக்கள் முன்னிலையில் மிரட்டிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கிராம நிர்வாக அலுவலர்கள் தர்னாவில் ஈடுபட்டுள்ளனர்.


பொதுமக்கள் முன்னிலையில் மிரட்டிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கிராம நிர்வாக அலுவலர்கள் தர்னாவில் ஈடுபட்டுள்ளனர்.
ஈரோடு, கங்காபுரம் கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றி வருபவர் மஞ்சமாதா (30). இவர், கங்காபுரம் நியாயவிலைக் கடையில் இலவச வேட்டி, சேலையை இறக்கும் பணியில் ஜனவரி 2 ஆம் தேதி ஈடுபட்டபோது, இவருக்கும் அந்தக் கடையின் விற்பனையாளர் கவிதாவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து, ஜனவரி 8 இல் கங்காபுரம் நியாயவிலைக் கடையில் பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது, அங்கே இருந்த சித்தோடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கச் செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, பொதுமக்கள், கட்சிப் பிரமுகர்கள் முன்னிலையில் விற்பனையாளருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தைக் குறிப்பிட்டு முதல்வரிடம் புகார் தெரிவிப்பதாக கவிதா மிரட்டினாராம்.
இதையடுத்து, கிராம நிர்வாக அலுவலர் மஞ்சமாதா, ஈரோடு வட்டாட்சியரிடம் தான் மிரட்டப்பட்ட சம்பவம் குறித்து எழுத்து மூலம் புகார் அளித்தார். ஆனால், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. 
இதையடுத்து, ஈரோடு தாலுகா அலுவக வளாகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் ராஜகோபால் தலைமையில், 40 க்கும் மேற்பட்டோர் தர்னா போராட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு ஈடுபட்டனர். மேலும், உரிய நடவடிக்கை எடுக்காததால் போராட்டம் சனிக்கிழமையும் தொடர்வதாக கிராம நிர்வாக அலுவலர்கள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com