ஐந்து வகை நிலம் சார்ந்த பொங்கல் கலை விழா

ஈரோட்டில் பொங்கல் திருநாளையொட்டி  5 வகை நிலம் சார்ந்த கலைவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஈரோட்டில் பொங்கல் திருநாளையொட்டி  5 வகை நிலம் சார்ந்த கலைவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
 ஈரோடு கருங்கல்பாளையம் வண்டியூரன் கோயில் வீதியில் உள்ள கலைத்தாய் அறக்கட்டளை அமைப்பு சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில்  பாரம்பரிய கலை மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவின் தொடக்கமாக, உயிர் வாழ உணவளிக்கும் இயற்கைக்கு நன்றி செலுத்தும் விதமாக, சர்க்கரை பச்சரிசி, பொங்கல் வைத்து சூரியனுக்கு படைத்து வழிபாடு செய்யப்பட்டது.
அதை தொடர்ந்து,  தப்பாட்டாம், கரகாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம், வழுக்கு மரம் ஏறுதல்,  சட்டி உடைத்தல், சாக்கு பை ஓட்டம், உள்ளிட்ட பல்வேறு வகையான போட்டிகள் நடைபெற்றன.  விழாவில் சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை திரளானோர் கலந்து கொண்டனர்.  நிகழ்ச்சியில் மூத்த இரு கலைஞர்களுக்கு பாராட்டுப் பரிசு வழங்கப்பட்டது.
விழா குறித்து கலைதாய் அறக்கட்டளையின் தலைவர் மாதேஸ்வரன் கூறியதாவது: 
நம் முன்னோர் நிலப்பரப்பை ஐந்து வகையாக பிரித்து ஒவ்வொரு நிலப் பரப்புக்கும் ஒரு கலையை உருவாக்கி விட்டுச் சென்றுள்ளனர்.
அதில், குறிஞ்சி நிலத்தை தகவலை பறிமாறிக் கொள்ளும், தப்பாட்டம்.  மேய்ச்சல் தொழில் அதிகம் உள்ள முல்லை நிலத்தில்  சட்டைக் குச்சியாட்டம். வயல்களை சார்ந்துள்ள நிலத்தில் அறுவடை ஒயிலாட்டம். கடல் சார்ந்த நெய்தல் நிலத்தில் படகு செலுத்த பயன்படுத்தும் பெரிய கம்பாட்டம். உரக்கப் பேசினால் உடலில் நீர்சத்து குறைந்து விடும் பாலை நிலத்தில் கோலடித்து தகவல்களை சொல்லும் கோலாட்டம் ஆகியவற்றை ஏற்படுத்தி வைத்துள்ளனர்.
அது மட்டுமில்லாமல் விதைநெல்லை பாதுகாக்க கரகாட்டமும், வீரத்தை வெளிப்படுத்தும் சிலம்பாட்டமும் இந்த ஐந்து வகை நிலத்திற்கும் பொதுவானது. இதை இளைய தலைமுறையின் மறந்து விடக்கூடாது என்பதற்காக ஆண்டு தோறும் பொங்கல் திருவிழாவில், மண் சார்ந்த கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com