பவானி நகராட்சியில் மலிவு விலை குடிநீர் விற்பனை தொடக்கம்: 20 லிட்டர் ரூ.7-க்கு விநியோகம்

பவானி நகராட்சியில் சுத்திகரிக்கப்பட்ட மலிவுவிலை குடிநீர் விற்பனை மையம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

பவானி நகராட்சியில் சுத்திகரிக்கப்பட்ட மலிவுவிலை குடிநீர் விற்பனை மையம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. இங்கு, தானியங்கி இயந்திரங்கள் மூலம் 24 மணி நேரமும் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. 
பவானி நகராட்சி மற்றும் தனியார் பங்களிப்புடன் ரூ.13 லட்சம் மதிப்பில் 2 ஆவது வார்டு காமராஜர் நகர் குடிநீர் மேல்தேக்கத் தொட்டி வளாகத்தில் இம்மையம் கட்டப்பட்டுள்ளது. இங்கு ஒரு மணி நேரத்துக்கு ஆயிரம் லிட்டர் தண்ணீர் சுத்திகரிக்கும் வகையில் இயந்திரங்கள் பொருத்தப்பட்டு, தானியங்கி இயந்திரங்கள் மூலம் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
இக்குடிநீர் விற்பனை மையம் திறப்பு விழா நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையர் க.கதிர்வேல் தலைமை தலைமை வகித்தார். திருப்பூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் வி.சத்யபாமா, கூட்டுறவு சங்கத் தலைவர்கள் என்.கிருஷ்ணராஜ், ஏ.சி.முத்துசாமி, பி.பி.மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் குடிநீர் விற்பனையைத் தொடக்கிவைத்தார். 
நிகழ்ச்சியில் அவர் பேசுகையில்,  முதல்கட்டமாக காமராஜர் நகரில் மலிவுவிலை குடிநீர் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.  இங்கு 20 லிட்டர் தண்ணீர் ரூ.7-க்கு விநியோகம் செய்யப்படுகிறது. அடுத்தகட்டமாக 10 வார்டுகளுக்கும்,  அதைத் தொடர்ந்து 17 வார்டுகளும் என 27 வார்டுகளிலும் தலா ரூ. 13 லட்சம் மதிப்பில் தனியார் பங்களிப்புடன் குடிநீர் மையங்கள் அமைக்கப்பட உள்ளன.  இதன்மூலம் பொதுமக்களுக்கு மிகக்குறைந்த விலையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுவது உறுதி செய்யப்படும் என்றார். 
பவானி ஒன்றியக் குழு முன்னாள் தலைவர் எஸ்.எம்.தங்கவேலு, கூட்டுறவு சங்கத் தலைவர்கள் எஸ்.எஸ்.சித்தையன், கே.கே.விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com